தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.
தற்போது கன்னியாகுமரி மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் வளிமண்டல கீழ் எடுத்து சுழற்சி நிலவுகிறது என்ற காரணமாக மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு அதிகமாக உள்ளது. மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று மிக கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த கனமழையின் காரணமாக காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார். மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்தார் மாவட்ட கலெக்டர் ஆகாஷ். அதேபோல் தஞ்சை மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டதாக கலெக்டர் பி.பிரியங்கா பஜங்கம் தெரிவித்துள்ளார். அதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் இளம் பகவத் உத்தரவிட்டுள்ளார்.