Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இத்தாலியில் பெய்து வரும் கனமழை! இது வரை 8 பேர் உயிரிழப்பு!!

#image_title

இத்தாலியில் பெய்து வரும் கனமழை! இது வரை 8 பேர் உயிரிழப்பு!
இத்தாலி நாட்டில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. இந்த கனமழை காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் 8 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
இத்தாலி நாட்டில் வடக்கு பகுதியான எமலியா ரோமக்னாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு எமலியா ரோமக்னா முழுவதும் வெள்ளக்காடக காட்சியளிக்கின்றது.
அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக மின் கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் எமலியா நகரம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக எமலியா நகரில் வீடுகள் இடிந்து விழுந்தது. மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இருந்தும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இதுவரை 1000 பேரை மீட்பு படையினர் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பியுள்ளனர். மேலும் பல மக்கள் காணமல் போனதால் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை இத்தாலி நாட்டில் பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது.
Exit mobile version