அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பெய்யவிருக்கும் கனமழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

0
99

தமிழகத்திலிருக்கின்ற 22 மாவட்டங்களில், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழக பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.

ஆகவே கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை, 22 மாவட்டங்களிலும்,

புதுச்சேரியிலும், இன்றும், நாளையும், கன மழை பெய்ததற்கான வாய்ப்புள்ளது. அதேபோல நேற்று காலை நிலவரத்தினடிப்படையில், 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக நீடாமங்கலத்தில் 11 செண்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

வேதாரண்யம், நாமக்கல், உள்ளிட்ட மாவட்டங்களில் 10 செண்டி மீட்டர் மழையும், அதிராம்பட்டினம் ஜெயங்கொண்டம் உள்ளிட்ட பகுதிகளில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது என்றும், அதில் கூறப்பட்டுள்ளது.