தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், வேலூர், நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம் , தருமபுரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும் சென்னையை பொறுத்தவரை ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் மிக கனமழை – சென்னை வானிலை ஆய்வு மையம்
