Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் கனமழை எச்சரிக்கை!! அவதிக்கு உள்ளாகும் மாநில மக்கள்!!

Heavy rain warning again!! The people of the state are suffering!!

Heavy rain warning again!! The people of the state are suffering!!

மீண்டும் கனமழை எச்சரிக்கை!! அவதிக்கு உள்ளாகும் மாநில மக்கள்!!

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறிவித்துள்ளது. கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால்  தமிழகத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து ஏற்கனவே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 8 முதல் ஜூலை 12ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும்  புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

சென்னையில் 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கடலோர பகுதியில் சூறாவளிக்காற்று மணிக்கும் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் இன்னும் 5 நாட்கள் மழை தொடரும் என்று வானிலை மயம் தெரிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் காலை முதல் கனமழை தொடரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதனையடுத்து ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களுக்கும் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Exit mobile version