தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை :! வானிலை மையம் தகவல்

0
107

தமிழகத்தில் நிலவி வரும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக , தமிழகத்தின் உள் மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி ,திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் இந்த மூன்று மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நிலவி வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,
கடலூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை மண்டலத்தை பொறுத்தவரை புறநகர் பகுதியில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்மேற்கு பருவமழையானது, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்களிருந்து விலகத் தொடங்கி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.