Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டெல்லியை புரட்டிப்போட்ட கனமழை! ஒருவர் உயிரிழப்பு!

தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்தியாவில் தற்போது பருவமழை ஆரம்பித்திருக்கின்ற சூழ்நிலையில், வழக்கமாக ஆரம்பிப்பதை விட 2 நாள் முன்னதாகவே பருவமழை தொடங்கி விட்டது என்று வானிலை ஆய்வு மையம் 2 நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தது.

அதன்படி கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் வெகுவாக மழை பெய்து வருகிறது. தமிழகத்திலும் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், தலைநகர் டெல்லியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் டெல்லியின் பல பகுதிகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கார் மீது மரம் விழுந்ததில் அதில் சிக்கிய குழந்தை உட்பட 3 பேர் கொண்ட குடும்பம் மீட்கப்பட்டதாக டெல்லி காவல்துறை தெரிவித்திருக்கிறது.

 மார்க்கெட் பகுதியில் பெய்த ஆலங்கட்டி மழையின் காரணமாக, 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார் என சொல்லப்படுகிறது.

வடக்கு டெல்லியின் பல பகுதிகளில் 40 மின் கம்பங்கள் சேதமடைந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதோடு பலத்த காற்றின் காரணமாக, டெல்லி ஜூம்மா மசூதியில் மாட பகுதி உடைந்து விழுந்தது. இதில் 3 பேர் காயமடைந்ததாக டெல்லி இமாம் சையது அகமது புகாரி தெரிவித்திருக்கிறார்.

கனமழையின் காரணமாக, கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.அதன் காரணமாக, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்திருக்கிறார்கள்.

Exit mobile version