இடி, மின்னலுடன் 9 மாவட்டங்களுக்கு கனமழை: அலார்ட் கொடுத்த வானிலை மையம்!
தமிழ்நாட்டில் அடுத்த நான்கு நாட்களுக்குப் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 28 மற்றும் ஏப்ரல் 29 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மேலும் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தேனீ, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி போன்ற வரும் மே 1 ஆம் தேதி முதல் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியை பொறுத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் தான் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.