கனமழையால் 5 பேர் பலி?ரெட் அலர்ட்?

0
130

கடந்த சில தினங்களாக தமிழ்நாடு கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மிகக் கனத்த மழை பெய்து வருகின்றது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் மேற்கு மலைத்தொடர் பகுதியில் அதிக கனமழை பெய்து வருகிறது அந்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேரளா மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் வடக்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர்.
மாமல்லபுரம் மாவட்டத்தின் நீலாம்பூர் கிராமத்தில் சாலியார் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்த கிராமம் முழுவதும் நீரில் மூழ்கி உள்ளது.இதனையடுத்து அப்பகுதி மக்கள் வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். கோழிக்கோடு வயநாடு மாமல்லபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருவதால் அப்பகுதியில் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

பல இடங்களில் வீடுகள் மீதும் மரங்கள் சாய்ந்ததால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பல பகுதியில் நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிப்பு அடைந்துள்ளது.இதுவரை அம்மாநிலத்தில் கனமழை காரணமாக 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.மேலும் 12 வீடுகள் முற்றிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.2000அதிகமானோர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.தற்போது அம்மாநிலத்தின் சில பகுதிகளுக்கு ரெட்அலர்ட் விடப்பட்டுள்ளது.