Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

படுத்தி எடுக்கும் குதிகால் வலி ஒரே நாளில் குணமாக.. ஒரு ஸ்பூன் கல் உப்பு போதும்!!

உங்களுக்கு குதிகால் வலி நீண்ட நாட்களாக இருக்கிறது என்றால் அதை சீக்கிரம் குணப்படுத்திக் கொள்ள மருத்துவர் சொன்ன இந்த வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க.

தேவையான பொருட்கள்:-

1)கொள்ளு பருப்பு மாவு – இரண்டு தேக்கரண்டி
2)நல்லெண்ணெய் – கால் தேக்கரண்டி
3)கல் உப்பு – சிறிதளவு
4)வினிகர் – கால் தேக்கரண்டி
5)தயிர் – கால் கப்

செய்முறை விளக்கம்:-

முதலில் கொள்ளு பருப்பு அல்லது வெந்தயம் எது இருக்கின்றதோ அதை ஒன்றரை தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை வறுக்காமல் மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.இந்த பவுடரை ஒரு கிண்ணத்திற்கு சலித்துக் கொள்ளுங்கள்.

அடுத்து அதில் கால் தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி மிக்ஸ் செய்யுங்கள்.அதன் பின்னர் சிறிதளவு,கால் தேக்கரண்டி வினிகர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

அதன் பின்னர் கால் கப் அளவு தயிரை அதில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும்.இந்த கலவையை குதிகால் பகுதியில் அப்ளை செய்து வந்தால் வலி சீக்கிரமாக குறைந்துவிடும்.

குதிகால் வலிக்கு மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)வடித்த கஞ்சி – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

நீங்கள் அரிசி வடித்த கஞ்சியை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளுங்கள்.அவை சூடு பொறுக்கும் அளவிற்கு இருக்க வேண்டும்.

இந்த கஞ்சியில் குதிகாலை வைத்து சிறிது நேரம் ஊற விடுங்கள்.அதன் பின்னர் குதிகாலுக்கு ஒத்தடம் கொடுங்கள்.இப்படி தினமும் இருநேரம் செய்து வந்தால் குதிகால் வலி குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் – தேவையான அளவு
2)கல் உப்பு – சிறிதளவு

செய்முறை விளக்கம்:-

முதலில் பாத்திரம் ஒன்றை எடுத்து தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.வெது வெதுப்பான பக்குவத்திற்கு வரும் வரை சூடாக்கி அடுப்பை அணைக்க வேண்டும்.

பிறகு இதை பக்கெட்டில் ஊற்றி சிறிது கல் உப்பு சேர்த்துக் குதிகால்களை அதில் ஊறவைக்க வேண்டும்.இப்படி செய்தால் குதிகால் வலி சீக்கிரம் குணமாகிவிடும்.

குதிகால் வலி இருப்பவர்கள் நல்லெண்ணெயை சூடாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.அதேபோல் அடிக்கடி ஓத்தடம் கொடுத்து வந்தால் குதிகால் வலி குணமாகும்.அதேபோல் கல் உப்பை வறுத்து துணியில் கொட்டி முடித்து குதிகால் மீது வைத்து ஒத்தடம் கொடுத்தால் வலி குணமாகும்.

Exit mobile version