Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சர்க்கரை நோயினால் குதிகால் வலியா? இதோ அதற்கான எளிய தீர்வு!  

சர்க்கரை நோயினால் குதிகால் வலியா? இதோ அதற்கான எளிய தீர்வு!  

இக்கால தலைமுறையில் பலருக்கும் ஒரு பெரும் பிரச்சனையாக இருப்பது நீரிழிவு நோய். நீண்ட கால நீரிழிவு நோயினால் கால்கள் மற்றும் பாதங்களில் உள்ள நரம்புகள் மற்றும் அதன் ரத்த ஓட்டத்தில் பாதிப்புகள் ஏற்படுவது உண்டு.

இதனால் பாதங்கள் மதமதப்பாகவும் சோர்வாகவும் கால் தசைகள் அதிக வலியுடன் காணப்படும். இதற்கான எளிய வைத்திய முறைகளில் சில,

1. ஆவாரம்பூபொடி 1-2 கிராம் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி காலை, மற்றும் இரவு குடிக்க வேண்டும். இது ரத்த சர்க்கரையின் அளவை குறைக்கும். 

2. ஒரு வாணலியில் அரிசித் தவிடு மற்றும் உப்பை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். அதை பருத்தித் துணியில் மூட்டையாகக் கட்டிக்கொள்ள வேண்டும். இதைக்கொண்டு குதிகால் பகுதியில் தினமும் ஒத்தடம் கொடுத்தால் வலி நீங்கும்.

3. மதுமேக சூரணம் அல்லது மதுமேக சூரண மாத்திரை காலை மற்றும் இரவு ஆகிய இரு வேளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

4. வெந்நீரில் குளிப்பது மிகவும் நல்லது.

5.வில்வக்காயை நெருப்பில் சுட்டு, அதைக்கொண்டு குதிகாலில் வலி உள்ள பகுதியில் தொடர்ந்து ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.

உணவில் உப்பு ஊறுகாய்களை அளவோடு எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் குறையும்.

6. நொச்சி இலை சாறு மற்றும் சமமான அளவு நல்லெண்ணெய் எடுத்து காய்ச்சி இதை குதிகால்களில் தடவி வர வலி குறையும்.

7. திராட்சை பழச்சாறில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து பருகுவதன் மூலம் குதிகால் வலி கட்டுப்படும்.

8.  சித்த மருத்துவத்தில் கிடைக்கும் அமுக்கரா சூரணம் 1 கிராம், பவள பற்பம் 200 மி.கி., அயக்காந்த செந்தூரம் 200 மி.கி., குங்கிலிய பற்பம் 200 மி.கி. இவற்றை காலை, மதியம், இரவு மூன்று வேளை வெந்நீரில் எடுத்துக் கொண்டால் கால் மதமதப்பு, தசை வலி நீங்கும்.

உடல் பருமனை குறைக்க வேண்டும். ஹை ஹீல்ஸ் அணிவது தவிர்த்து காலுக்கு சரியான காலணிகள் அணிவது நலம். கடினமான தரை பகுதிகளில் செருப்பு இல்லாமல் நடக்க வேண்டாம்.

Exit mobile version