Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாரிசுகளே தமிழக அரசின் நிவாரண தொகையை பெற்று விட்டீர்களா? பெறவில்லை என்றால் இதோ ஒரு வாய்ப்பு!

நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த குடும்பத்தைச் சார்ந்தவர்களின் வாரிசுகளுக்கு 50 ஆயிரம் நிதி உதவி வழங்க தமிழக அரசால் ஆணை வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

சென்னையில் மாநகராட்சி இடம் இருக்கின்ற பதிவுகளின் அடிப்படையில் 8,347 பேர் நோய்களால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள், இதுவரையில் 6888 பேர் இணையவழியில் பதிவு செய்திருக்கிறார்கள். அதில் எல்லா விதமான ஆவணங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப்பட்ட 3638 பேருக்கு 50 ஆயிரம் நிதியுதவி மின்னணு பரிவர்த்தனை மூலமாக வழங்கப்பட்டிருக்கிறது. அதன் விவரம் இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

,மீதம் இருக்கின்ற விண்ணப்பங்கள் வாரிசு மற்றும் சட்ட ரீதியான பிரச்சினைகள் காரணமாகவும், முழுமையான முகவரி இல்லாததாலும் .வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதாலும், கள ஆய்வின்போது வேறு முகவரிக்கு குடிபெயர்ந்து சென்றதாலும், பொதுமக்கள் அவர்களாகவே முன்வந்து இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட முழுமையாக மருத்துவ ஆவணங்கள், உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்காததாலும், அரசு வழங்கும் நிதி உதவிகளை வழங்க இயலாத சூழ்நிலை இருந்து வருகிறது.

ஆகவே நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் வாரிசுதாரர்கள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழாவது மாடியில் இருக்கின்ற பேரிடர் மேலாண்மை பிரிவு அல்லது 1077 என்ற இலவச எண்ணையோ அல்லது சம்பந்தப்பட்ட வருவாய் வட்டாட்சியர் கலை தொடர்பு கொண்டு நோய்தொற்று பரிசோதனை செய்யப்பட்டதற்கான ஆவணம், மருத்துவ சிகிச்சைக்கான ஆவணங்கள், மயான சான்றிதழ், இறப்பு சான்றிதழ், வாரிசு சான்றிதழ், உள்ளிட்டவற்றை வங்கி கணக்குடன் முழுமையான ஆவணங்கள் தாக்கல் செய்து ஐம்பதாயிரம் ரூபாய் நிதி உதவியினை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு 18 வயதிற்கு கீழே இருக்கும் குழந்தைகளின் பெற்றோர்களில் ஒருவரை இழந்த அல்லது இருவரையும் இழந்த முறையே 3 லட்சம் மற்றும் 5 லட்சம் பெற்றவர்களும் மேற்படி 50 ஆயிரம் நிதி உதவி தொகை பெறுவதற்கு தகுதி உடையவர்கள் என்ற காரணத்தால், அவர்களோ அல்லது அவர்களின் பாதுகாவலர்கள் மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு மேலும் விவரங்களுக்கு சென்னை வடக்கு மாவட்ட கோட்டாட்சியர், மத்திய வருவாய் கோட்டாட்சியர் ,தெற்கு வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர்களை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version