Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கோ பேக் மோடியை வீழ்த்திய வணக்கம் மோடி! ஆதரவாளர்களுக்கு அண்ணாமலை நன்றி!

தமிழகத்திற்கு வருகை என்ற பிறந்தநாள் நரேந்திர மோடி வரவேற்று தமிழக பாஜகவினர் ட்விட்டர் என்ற சமூக வலைதளத்தில் பதிவிட்ட வணக்கம் மோடி என்ற பதிவு ட்ரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்திருக்கிறது.

திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமிய பல்கலை க்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பங்கேற்றார் அவரை வரவேற்று தமிழக பாஜகவினர் நேற்று முன்தினம் இரவு முதலில் வணக்கம் மோடி என்ற ஹாஷ்டேக்கை ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

அதற்கு ஆதரவாக பலரும் பதிவிட்டபடி இருந்து வந்தனர். நேற்று காலை 11 மணி வரையில் பதிவு 10 லட்சத்தை கடந்தது. இதனை தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் வணக்கம் மோடி என்ற பதிவு முதல் இடத்தை பிடித்தது.

இது தொடர்பாக தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை விடுத்த அறிக்கையில் வணக்கம் மோடி என்ற பதிவு 10 லட்சம் சீட்டுகளை தாண்டியதில் மிக்க மகிழ்ச்சி தமிழக பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல் குமார் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் எண்ணற்ற ஆதரவாளர்களுக்கு வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version