புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட வேண்டும் என கடந்த 2017 -ஆம் ஆண்டு மே மாதம் சட்ட பூர்வமாக கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு மக்கள் மத்தியில் கிளம்பியது. இதனால் இந்த ஹெல்மெட் திட்டத்தை புதுச்சேரி அரசு வாபஸ் பெறப்பட்டது. அதன் பின்பு வந்த கவர்னர் கிரண்பேடி கட்டாயம் ஹெல்மெட் அணியும் திட்டத்தை அமுல்படுத்துமாறு போலீஸ் அதிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனால் மீண்டும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என அரசு உத்தரவிட்டது. இந்த திட்டத்தில் கண்டிப்பாக போலீஸ் மற்றும் அரசு உழியர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் கிரண்பேடி தலைமை கூறி இருந்தது. ஆனால் அதிகமாக யாரும் இந்த ஹெல்மெட் அணியும் பழக்கத்தை முயச்ச்சிக இல்லை. குறைந்த வாகன ஓட்டிகள் மட்டும் தான் அணித்து சென்றனர்.
மேலும் இந்த நிலையில் தற்போது இருசக்கர வாகன ஓட்டிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் இந்த திட்டத்தை தற்போது நடைமுறைக்கு கொண்டுவருவதாக புதுவை அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்த திட்டத்தை வருகிற ஜனவரி மாதம் முதல் தேதி கட்டாயம் என போலீஸ் உத்தரவிட்டுள்ளனர். அதனை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடுமையாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் என காவல் துறை தெரிவித்துள்ளது.