Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்!! ஆட்சியை பிடித்தது காங்கிரஸ் கூட்டணி-மீண்டும் முதலமைச்சராகிறார் ஹேமந்த் சோரன்!!

Hemant Soran becomes the Chief Minister for the 4th time in Jharkhand assembly elections

Hemant Soran becomes the Chief Minister for the 4th time in Jharkhand assembly elections

Jharkhand: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. 4வது முறையாக முதலமைச்சராகிறார் ஹேமந்த் சோரன்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில்  சட்டமன்ற தேர்தல் கடந்த நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆம் தேதிகளில் இரண்டு நாட்கள் இரு கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. இதுவே ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வாக்குகள் பெற்ற முதல் தேர்தல் ஆகும். இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நவம்பர்-23 நடைபெற்று வருகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் வெற்றி பெற 41 தொகுதியில் வெற்றி பெற வேண்டும். ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. பாஜகவும் சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலில் களம் இறங்கியது.

நண்பகல் 1 மணி நிலவரப்படி 50 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது காங்கிரஸ் கூட்டணி கட்சி. பாஜக கூட்டணி கட்சி 30 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. எனவே பெரும்பான்மை நிரூபிக்க 41 தொகுதிகளை கைப்பற்றும் இருக்க வேண்டும் ஆனால் அதற்கும் அதிகமாக காங்கிரஸ் கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால் தொடர்ந்து நான்காவது முறையாக முதலமைச்சர் ஆகிறார் ஹேமந்த் சோரன்.

ஹேமந்த் சோரன் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் ஹேமந்த் சோரன் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version