இனி மின் கணக்கெடுப்பு இப்படித்தான் எடுக்கப்படும்!! தமிழக மின்சார வாரியத்தில் வந்த அதிரடி மாற்றம்!! 

0
476
Henceforth e-survey will be taken like this!! Dramatic change in Tamil Nadu Electricity Board!!

இனி மின் கணக்கெடுப்பு இப்படித்தான் எடுக்கப்படும்!! தமிழக மின்சார வாரியத்தில் வந்த அதிரடி மாற்றம்!!

தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் பதவியேற்ற காலங்களிலிருந்து பல அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். இந்நிலையில் ஆரம்பகாலத்தில் அவர் மாதாந்திர மின்தடை கால அளவை 9 மணி நேரமாக இருந்ததை 5 மணி நேரமாக குறைத்தார். இது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. தற்போது அந்த கால அளவு வழக்கம் போல் 9மணி நேரமாக மாறிவிட்டது.

இந்நிலையில் தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் ஒரு சிறப்பான திட்டத்தை வகுத்து வருகிறார். இங்கிலாந்தை சேர்ந்த பிரபல கன்சல்டன்சி நிறுவனமான Ernst & Young உடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிகிறது. EY என்பது உத்தரவாதம், ஆலோசனை, உத்தி மற்றும் பரிவர்த்தனைகள் மற்றும் வரி சேவைகள் ஆகியவற்றில் உலகளாவியளவில் முன்னணியில் உள்ளது. இவர்கள் வழங்கும் நுண்ணறிவு மற்றும் தரமான சேவைகள் மூலதனச் சந்தைகள் மற்றும் உலகெங்கிலும் உள்ள பொருளாதாரங்கள் மீது நம்பிக்கையையும் வளர்க்க உதவுகின்றன.

மேலும் இந்நிறுவனம் தமிழகத்தில் 50க்கும் மேற்ப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை ஆய்வு செய்து வருகிறது. இந்நிறுவனம் பொதுத்துறைகளின் ஆண்டறிக்கை, இடைக்கால பொருளாதார அறிக்கை மற்றும் நடப்பு வருமான குறிப்புகள். போன்றவற்றை ஆய்வு செய்கின்றன.

இந்நிலையில் அவர்களின் அறிவுறுத்தலின் பெயரில் மொபைல் செயலியை அறிமுகம் செய்ய உள்ளனர். இச்செயலி மின்களப்பயணியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.

இச்செயலியின் மூலம் மின்பயன்பாடு கணக்கெடுப்பு மற்றும் கணக்கெடுக்காதவை போன்றவைகளின் விவரங்களை அறிய முடியும். மேலும் மின்கட்டணம் செலுத்திய இணைப்புகள் மற்றும் செலுத்தாத இணைப்புகள் பற்றிய விவரங்களை அறிய முடியும்.

மேலும் மழைக்காலங்களில் ஏற்படும் மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் மின்பளு குறைபாடு போன்றவற்றை அறியமுடியும். மற்றும் மின்சார சேவை தொடர்பான புகார்களையும் ஆய்வு செய்ய முடியும்.