Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நிமிடத்தில் சளியை கரைத்து வெளியேற்றும் மூலிகை கஷாயம் – தயார் செய்வது எப்படி?

#image_title

நிமிடத்தில் சளியை கரைத்து வெளியேற்றும் மூலிகை கஷாயம் – தயார் செய்வது எப்படி?

தற்பொழுது மழைக்காலம் என்பதினால் சளி, இருமல் போன்ற பாதிப்புகள் நமக்கு எளிதில் தொற்றி விடும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. சளி பிடித்து விட்டால் எந்த ஒரு உணவின் வாசனையையும் நுகர முடியாது. அதனோடு இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகளும் வர தொடங்கி விடும். இதற்கு மாத்திரைகள் பயன்படுத்தி சரி செய்வதை காட்டிலும் இயற்கை முறையில் மிளகு, தூதுவளை, சுக்கு உள்ளிட்ட பொருட்களை வைத்து கஷாயம் செய்து பருகினால் நம்மை ஆட்டி படைத்து வந்த சளி கரைந்து மூக்கு மற்றும் மலம் வழியாக உடனடியாக வெளியேறி விடும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் இந்த மூலிகை கஷாயத்தை பருகலாம்.

தேவையான பொருட்கள்:-

*வெற்றிலை – 1

*மிளகு – 5 –

*கொத்தமல்லி விதை – 1/2 தேக்கரண்டி

*சுக்கு – சிறு துண்டு

*தூதுவளை – 10

*துளசி – 20 இலைகள்

*கற்பூரவல்லி – 1

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 3 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பின்னர் அதில் தூதுவளை, துளசி, கற்பூரவல்லி, வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

பின்னர் கரு மிளகு, கொத்தமல்லி விதையை ஒரு உரலில் போட்டு இடித்து பொடியாக கொள்ளவும். இதை கொதிக்கும் கலவையில் சேர்க்கவும்.

அதேபோல் சுக்கு சிறு துண்டு எடுத்து உரலில் போட்டு இடித்து பொடி செய்து கொள்ளவும். அதையும் கொதிக்கும் நீரில் போட்டுக் கொள்ளவும்.

அவை 3 டம்ளரில் இருந்து 1 1/2 டம்ளராக சுண்டி வந்த பின்னர் அடுப்பை அணைத்து விடவும். பிறகு அந்த கஷாயத்தை ஒரு டம்ளருக்கு வடிகட்டி அவற்றை பருக வேண்டும். மழைக்காலத்தில் ஏற்படும் சளி மற்றும் இருமலுக்கு இந்த மூலிகை கஷாயம் சிறந்த தீர்வாக இருக்கும்.

Exit mobile version