மாரடைப்பு வராமல் தடுக்க உதவும் மூலிகை கசாயம் – தயார் செய்வது எப்படி?
மாரடைப்பு நோய் தற்பொழுது இளம் வயதினரை அதிகம் பாதித்து வருகிறது. மோசமான உணவுப்பழக்கம், அதிகப்படியான மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் இந்த மாரடைப்பு உயிரை பறிக்கும் நோய்களில் ஒன்றாக இருக்கிறது.
மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள்:-
நெஞ்சு பகுதியில் அழுத்தம், அதிக வியர்வை, மூச்சு திணறல், இடது தோள்பட்டை வலி, கை கால் வலி, தடை வலி உள்ளிட்டவைகள் மாரடைப்பு வருவதற்கான அறிகுறிகள் ஆகும்.
மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணங்கள்:-
இரத்த அழுத்தம், அத்திப்படியான மன அழுத்தம், தூக்கமின்மை, சர்க்கரை நோய் அளவு அதிகரிப்பு, மது அருந்துதல், புகை பிடித்தல், கொழுப்பு நிறைந்த உணவு உண்ணுதல், உடல் பருமன் உள்ளிட்டவைகள் மாரடைப்பு ஏற்பட முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது.
இயற்கை முறையில் மாரடைப்பு வராமல் தடுப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:-
*தாமரை இதழ்
*வெல்லம்
*சுக்கு
*மிளகு
*திப்பிலி
செய்முறை விளக்கம்…
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் சுக்கு, திப்பிலி, மிளகு சம அளவு சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.
பின்னர் அதில் சிறிதளவு தாமரை இதழ் மற்றும் வெல்லம் சேர்த்து கொதிக்க விட்டு வடிகட்டி இரவில் தூங்கச் செல்வதற்கு முன் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராமல் இருக்கும்.