Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கெட்டுப்போன கல்லீரலை சுத்தம் செய்யும் மூலிகை சாறு! இஞ்சியுடன் இந்த 4 பொருட்கள் மட்டும் தான் தேவைப்படும்!

Herbal juice that cleanses the damaged liver!

Herbal juice that cleanses the damaged liver!

கெட்டுப்போன கல்லீரலை சுத்தம் செய்யும் மூலிகை சாறு! இஞ்சியுடன் இந்த 4 பொருட்கள் மட்டும் தான் தேவைப்படும்!

நமது உடலில் முக்கிய உள்ளுறுப்பான கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்காக சில ஆரோக்கிய பானங்களை எடுத்து வருவது நல்லது.கெட்டுப்போன கல்லீரலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர மூலிகை சாறு உதவுகிறது.இதை எவ்வாறு தயாரிக்கலாம் என்று கீழே விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது.

தேவைப்படும் பொருட்கள்:

1)இஞ்சி
2)எலுமிச்சை சாறு
3)கேரட்
4)பீட்ரூட்
5)தேன்

மூலிகை சாறு தயாரிக்கும் முறை:

ஒரு முழு கேரட்டை தோல் நீக்கிக் கொள்ளவும்.அதேபோல் ஒரு பீட்ரூட்டை பாதியாக நறுக்கி அதன் தோலை நீக்கி விடவும்.

இவை இரண்டையும் ஒரு கிண்ணத்தில் போட்டு கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதன் விதைகளை நீக்கி சாற்றை மட்டும் ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதனுள் நறுக்கி வைத்துள்ள பீட்ரூட்,கேரட் சேர்க்கவும்.பிறகு இஞ்சி துண்டுகளை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி மைய்ய அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த சாற்றை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி அதில் பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்காக தேன் சேர்த்து குடிக்கவும்.காலையில் உணவு உட்கொள்ளவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக இந்த சாற்றை அருந்த வேண்டும்.

தொடர்ந்து ஒரு மாதம் இதை பாலோ செய்து வந்தால் கல்லீரலில் உள்ள தேவையற்ற கழிவுகள் வெளியேறி அதன் ஆரோக்கியம் மேம்படும்.

Exit mobile version