Asthma: இது நுரையீரல் சம்மந்தபட்ட பாதிப்பாகும்.இந்த பாதிப்பு தீவிரமானால் மூச்சு விடுவதில் கடுமையான சிரமம் ஏற்படும்.ஆஸ்துமா உள்ளவர்கள் குளிர்ச்சி நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.இந்த பாதிப்பில் இருந்து மீள மூலிகை ரசம் வச்சி சாப்பிடுங்கள்.
ஆஸ்துமா அறிகுறிகள்:
**மூச்சுத்திணறல்
**மார்பு இறுக்கம்
**இருமல்
**சுவாசிப்பதில் கடுமையான சிரமம்
**இரவில் அதிக இருமல்
ஆஸ்துமா உணடாக காரணங்கள்:
**தூசி
**காற்று மாசு
**அலர்ஜி
**உணவுகள்
**புகை
ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும் மூலிகை ரசம்:
தேவையான பொருட்கள்:-
1)கருப்பு மிளகு
2)சீரகம்
3)புளி
4)உப்பு
5)கறிவேப்பிலை
6)சின்ன வெங்காயம்
7)எண்ணெய்
8)தக்காளி
9)பூண்டு
10)கடுகு
11)வர மிளகாய்
செய்முறை விளக்கம்:-
முதலில் ஒரு எலுமிச்சை அளவு புளியை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊறவைக்க வேண்டும்.
அடுத்து பூண்டு,வர மிளகாய்,சீரகம் மற்றும் மிளகை உரலில் போட்டு இடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு ஒரு தக்காளி பழம்,சின்ன வெங்காயம் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு கறிவேப்பிலை போட்டு பொரிய வைக்க வேண்டும்.
அடுத்து இடித்த பூண்டு கலவையை அதில் போட்டு வதக்க வேண்டும்.அதன் பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி பழத்தை போட்டு வதக்க வேண்டும்.
அடுத்தாக ஊறவைத்த புளிக்கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து குறைந்த தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.இந்த மிளகு ரசத்தை சூடாக இருக்கும் பொழுது பருகினால் ஆஸ்துமா குணமாகும்.
அதேபோல் ஆஸ்துமா உள்ளவர்கள் நெல்லிக்காய் ரசம் சாப்பிடலாம்.உணவு சூடாக இருக்கும் பொழுது உட்கொள்ளுதல் போன்றவற்றை செய்யலாம். ஆஸ்துமா பாதிப்பு தீவிரமானால் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும்.ஆஸ்துமா பாதிப்பை ஏற்படுத்தும் செயல்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.