Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கை கால் மூட்டு வலியை போக்கும் ஹெர்பல் ஆயில்!! ஒரு துளி போதும்.. வலி பறந்துவிடும்!!

Herbal oil that relieves hand and foot joint pain!! One drop is enough.. the pain will fly away!!

Herbal oil that relieves hand and foot joint pain!! One drop is enough.. the pain will fly away!!

கை கால் மூட்டு வலியை போக்கும் ஹெர்பல் ஆயில்!! ஒரு துளி போதும்.. வலி பறந்துவிடும்!!

இன்று பெரும்பாலானோர் மூட்டு வலி,கை கால் வலியால் அவதியடைந்து வருகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுமுறை பழக்கம் தான்.இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட கீழே கொடுக்கப்பட்டுள்ள மூலிகை எண்ணெயை தயாரித்து பயன்படுத்தி வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)முடக்கத்தான் கீரை
2)நல்லெண்ணெய்
3)சுக்கு

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 250 மில்லி நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு கைப்பிடி அளவு முடக்கத்தான் கீரையை அதில் போட்டு பொரிய விடவும்.

அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று சுக்கு துண்டுகளை அதில் போட்டு மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு காய்ச்சி அடுப்பை அணைக்கவும்.

இந்த எண்ணையை நன்கு ஆறவிட்டு ஒரு பாட்டிலுக்கு வடிகட்டி கொள்ளவும்.பிறகு இதை மூட்டு,கை கால்களில் அப்ளை செய்து வந்தால் வலி ,வீக்கம் முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)ஊமத்தை இலை
2)விளக்கெண்ணெய்
3)துத்தி கீரை

செய்முறை:-

அடுப்பில் ஒரு வாணலி வைத்து 250 மில்லி விளக்கெண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் 50 கிராம் ஊமத்தை இலை மற்றும் 50 கிராம் துத்தி கீரை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.

பிறகு அடுப்பை அணைத்து இந்த எண்ணெயை நன்கு ஆற விடவும்.இந்த எண்ணெயை மூட்டு,கை கால் பகுதிகளில் அப்ளை செய்து வந்தால் வலி,வீக்கம் முழுமையாக குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து
2)வெல்லம்
3)முட்டை

செய்முறை:-

ஒரு மிக்ஸி ஜாரில் 25 கிராம் கருப்பு உளுந்து போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.பிறகு இதை ஒரு கிண்ணத்தில் கொட்டிக் கொள்ளவும்.அதன் பின்னர் ஒரு முட்டையை உடைத்து அதில் ஊற்றி கலந்து விடவும்.

பிறகு ஒரு துண்டு வெல்லத்தை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பவுடராக்கி கொள்ளவும்.இந்த வெல்லத்தூளை உளுந்து பேஸ்ட்டில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

இதை மூட்டு,கை கால் உள்ளிட்ட பகுதிகளில் அப்ளை செய்து வந்தால் வலி,வீக்கம் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும்.

Exit mobile version