Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆண்மையை தட்டி எழும்பும் மூலிகை கஞ்சி! இதை தயார் செய்வது எப்படி?

herbal-porridge-that-knocks-virility and-rises-how-to-prepare-it

herbal-porridge-that-knocks-virility and-rises-how-to-prepare-it

ஆண்மையை தட்டி எழும்பும் மூலிகை கஞ்சி! இதை தயார் செய்வது எப்படி?

கடந்த காலங்களில் ஆண்மை குறைபாட்டால் குறைந்தளவு ஆண்களே பாதிக்கப்பட்டு வந்தனர்.ஆனால் இன்று பெரும்பாலான ஆண்களுக்கு ஆண்மை பிரச்சனை இருக்கிறது.இதற்கு முக்கிய காரணம் மோசமான உணவுமுறை பழக்கம்.

ஆண்மையை குறைக்க உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதே இந்த பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம்.மலட்டு தன்மை,விந்தணு குறைபாடு,விந்து முந்துதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு இதோ.

தேவையான பொருட்கள்:-

1)அஸ்வகந்தா
2)முருங்கை பருப்பு
3)பாதாம் பிசின்
4)கொள்ளு
5)வேர்க்கடலை

கொள்ளு,வேர்க்கடலை தவிர்த்து பிற பொருட்கள் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.ஒவ்வொன்றையும் 100 கிராம் அளவிற்கு வாங்கி கொள்ளவும்.

செய்முறை:-

முருங்கை விதையை தோல் நீக்கி அதன் பருப்பை ஒரு வாணலி போட்டு அடுப்பில் வைத்து வறுக்கவும்.ஒரு நிமிடம் வறுத்தால் போதுமானது.பிறகு 50 கிராம் கொள்ளு மற்றும் 50 கிராம் வேர்க்கடலையை வாணலியில் போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

அதன் பின்னர் ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 100 கிராம் அஸ்வகந்தா,100 கிராம் பாதாம் பிசின்,வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை,கொள்ளு மற்றும் முருங்கை பருப்பு சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடாக்கவும்.பால் ஒரு கொதி வரும் தருணத்தில் அரைத்த பொடி இரண்டு தேக்கரண்டி அளவு சேர்த்து கிளறவும்.இவ்வாறு செய்தால் கஞ்சி பதத்திற்கு கிடைக்கும்.

பச்சை வாடை நீங்கும் வரை கிளறி விடவும்.பிறகு அடுப்பை அணைத்து விடவும்.இந்த கஞ்சியை ஆறவிட்டு சாப்பிட்டு வந்தால் விந்தணு குறைபாடு,மலட்டு தன்மை உள்ளிட்டவை நீங்கி ஆண்மை அதிகரிக்கும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)தர்பூசணி விதை
2)பூனைக்காலி விதை

செய்முறை:-

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பொருட்களையும் 250 கிராம் அளவு எடுத்துக் கொள்ளவும்.இதை வாணலியில் போட்டு மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைக்கவும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி அளவு அரைத்த பொடி சேர்த்து கலக்கி குடிக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் ஆண்மை தொடர்பான அனைத்து பாதிப்புகளும் சரியாகும்.

Exit mobile version