வயிறு சம்மந்தப்பட்ட அனைத்து நோய்களையும் துரத்தி அடிக்கும் மூலிகை வைத்தியம்!!

0
773
Herbal Remedies for All Stomach Related Diseases!!

உங்களுக்கு ஏற்பட்டுள்ள வயிற்றுப்புண்,குடற்புழு,வயிறு உப்பசம் போன்ற பாதிப்புகள் அனைத்திற்கும் தீர்வு இங்கு தரப்பட்டுள்ளது.

வயிறு உப்பசம்

1)சீரகம்
2)மோர்

ஒரு தேக்கரண்டி சீரகத்தை வறுத்து பொடியாக்கி மோரில் கலந்து குடித்தால் வயிறு உப்பசம் சரியாகும்.

1)இஞ்சி
2)தண்ணீர்

ஒரு சிறிய துண்டு இஞ்சியை பொடியாக நறுக்கி ஒரு கிளாஸ் நீரில் போட்டு சூடுபடுத்தி பருகி வந்தால் வயிறு உப்பசம் சரியாகும்.

வயிற்றுப்புண்

1)அகத்திக்கீரை
2)தேன்

ஒரு கைப்பிடி அகத்து கீரையை மிக்சர் ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும்.பிறகு இதை கிண்ணத்திற்கு வடிகட்டி சிறிது தேன் கலந்து பருகினால் வயிற்றுப்புண் குணமாகும்.

1)மணத்தக்காளி கீரை

சிறிதளவு மணத்தக்காளி கீரையை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்து பருகி வந்தால் வயிற்றுப்புண் குணமாகும்.

வாந்தி குமட்டல்

1)கொய்யா இலை
2)தண்ணீர்

இரண்டு கொய்யா இலையை அரைத்து சாறு எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கொதிக்க வைத்து பருகினால் வாந்தி,குமட்டல் சரியாகும்.

1)எலுமிச்சை சாறு
2)தேன்

ஒரு கிளாஸ் அளவு நீரில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து பருகினால் வாந்தி,குமட்டல் சரியாகும்.

மலச்சிக்கல்

1)கொத்தமல்லி
2)தண்ணீர்

ஒரு பாத்திரத்தில் 150 மில்லி தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி கொத்தமல்லி விதை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் மலச்சிக்கல் தீரும்.

1)விளக்கெண்ணெய்
2)தண்ணீர்

ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் இரண்டு அல்லது மூன்று சொட்டு விளக்கெண்ணய் சேர்த்து பருகினால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும்.

வயிறு கடுப்பு

1)தென்னங்காய் மட்டை

பிஞ்சு தென்னங்காய் மட்டையை இடித்து சாறு எடுத்து பருகினால் வயிறு கடுப்பு நீங்கும்.

1)புளி
2)தண்ணீர்
3)வெல்லம்

ஒரு கிளாஸ் நீரில் இரண்டு தேக்கரண்டி புளி கரைசல் சேர்க்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெல்லம் கலந்து பருகினால் வயிறு கடுப்பு குணமாகும்.

குடற்புழு

1)பாகற்காய்
2)தண்ணீர்

ஒரு பாகற்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி ஜூஸாக அரைத்து பருகினால் குடலில் உள்ள புழுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

1)வேப்பிலை
2)தண்ணீர்

ஒரு கைப்பிடி அளவு கொழுந்து வேப்பிலையை அரைத்து சாறு எடுத்து ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருகினால் குடற்புழு நீங்கும்.