மலக் கழிவுகளை மளமளவென வெளியேற்றும் மூலிகை சூரணம்!! தினமும் ஒருவேளை குடித்தாலே போதும்!!
உங்களில் பலர் தினந்தோறும் சந்திக்கும் பிரச்சனையாக மலச்சிக்கல்,வாயு தொல்லை இருக்கிறது.இவை இரண்டுமே தர்ம சங்கடமான சூழலை உருவாக்கி விடும்.இந்த பாதிப்புகள் ஏற்பட முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுகள் தான்.
எளிதில் செரிக்காத,எண்ணெய் மற்றும் காரம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.இதை சாதாரண பாதிப்பு என்று அலட்சியம் கொள்ளாமல் உரியத் தீர்வு காண்பது நல்லது.
தேவையான பொருட்கள்:-
1)பெருங்காயம் – 1 துண்டு
2)அஸ்வகந்தா – 1 துண்டு
3)சுக்கு – 1 துண்டு
4)சோம்பு – 3 தேக்கரண்டி
5)கரு மிளகு – 1 தேக்கரண்டி
6)பூண்டு வற்றல் – 5
7)நெல்லிக்காய் வற்றல் – 5
செய்முறை:-
அடுப்பில் ஒரு வாணலி வைத்து மூன்று தேக்கரண்டி சோம்பு,ஒரு தேக்கரண்டி கரு மிளகு சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
பின்னர் அதே வாணலியில் ஒரு துண்டு பெருங்காயம் போட்டு சூட்டில் வறுக்கவும்.அதன் பின்னர் வறுத்த பொருட்களை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளவும்.பிறகு அதில் ஒரு துண்டு அஸ்வகந்தா,ஒரு துண்டு சுக்கு,5 பூண்டு வற்றல்,5 நெல்லிக்காய் வற்றல் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.இந்த சூரணத்தை ஈரமில்லாத ஒரு டப்பாவில் போட்டு சேமித்துக் கொள்ளவும்.
பயன்படுத்தும் முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த சூரணம் ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும்.
இந்த சூரணத்தை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதன் மூலம் மலச்சிக்கல்,வாயு பிரச்சனையை குணமாக்கி கொள்ள முடியும்.
இந்த சூரணத்தை பாலில் கலந்தும் அருந்தலாம்.அல்லது தினமும் ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டும் வரலாம்.