Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மாதவிடாய் வயிற்று வலியை குணப்படுத்தும் மூலிகை டீ!! ஒருமுறை குடித்தால் போதும் நிரந்தர தீர்வு கிடைக்கும்!!

Herbal tea to cure period stomach ache!! One drink is enough to get a permanent solution!!

Herbal tea to cure period stomach ache!! One drink is enough to get a permanent solution!!

மாதவிடாய் வயிற்று வலியை குணப்படுத்தும் மூலிகை டீ!! ஒருமுறை குடித்தால் போதும் நிரந்தர தீர்வு கிடைக்கும்!!

மாதவிடாய் காலத்தில் ஒரு சில பெண்களுக்கு வயிற்றுப் பகுதியில் அதீத வலி ஏற்படும்.இந்த வலி இடுப்பு பகுதி சுற்றி ஏற்படுவதால் பெண்கள் கடுமையான தொந்தரவுகளை சந்திப்பார்கள்.

சிலருக்கு குமட்டல்,வாந்தி,மயக்கம்,உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.இளம் பருவத்தில் கருப்பையில் இருக்கும் திசுக்களின் அதீத வளர்ச்சியால் இந்த வயிற்று வலி ஏற்படுகிறது.இதை இயற்கையான முறையில் குணப்படுத்துவது குறித்து விளக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)முருங்கை பூ
2)தேன்
3)தண்ணீர்

செய்முறை:-

ஒரு கப் முருங்கை பூவை நீரில் போட்டு சுத்தம் செய்து கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.

பின்னர் அதில் சுத்தம் செய்த முருங்கை பூ சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.அதன் 1 கப் நீர் 1/2 கப் அளவு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேவையான அளவு தேன் கலந்து குடித்தால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி குணமாகும்.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

1)வெந்தயம்
2)தண்ணீர்

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் வயிற்று வலிக்கு தீர்வு கிடைக்கும்.

Exit mobile version