வயிற்றில் தேங்கி இருக்கும் வாயுக்களை வெளியேற்றும் 4 பொருட்கள் சேர்த்த மூலிகை நீர்!! இதை குடித்த நிமிடத்தில் பலன் கிடைக்கும்!!
உங்கள் வயிற்றுப் பகுதியில் அதிகளவு வாயுக்கள் தேங்கி இருந்தால் அவை அசௌகரியமான சூழலை ஏற்படுத்தும்.வாயு பிரச்சனை இருப்பவர்களால் மற்றவர்களுக்கு சங்கட நிலை ஏற்படும்.
வாயுத் தொல்லை ஏற்பட முக்கிய காரணம் நாம் மேற்கொள்ளும் உணவுமுறை தான்.சிலர் அதிக மசாலாக்கள் சேர்க்கப்பட்ட கார உணவுகளை உட்கொள்வார்கள்.சிலர் மலச்சிக்கல்,வயிறு உப்பசம்,செரிமானப் பிரச்சனையை சந்தித்து வருவார்கள்.இவர்களுக்கு வாயுத் தொல்லை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
இந்த வாயுத் தொல்லையில் இருந்து விடுதலை வேண்டும் என்று நினைப்பவர்கள் பூண்டு,சீரகம் போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்ட பானத்தை குடித்து வருவது நல்லது.
தேவையான பொருட்கள்:-
1)பூண்டு – 4
2)கறிவேப்பிலை – 1 கொத்து
3)உப்பு – தேவையான அளவு
4)சீரகம் – 2 தேக்கரண்டி
5)தண்ணீர் – 1 கிளாஸ்
செய்முறை:-
நான்கு பல் பூண்டை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 2 தேக்கரண்டி சீரகம் மற்றும் ஒரு கொத்து கறிவேப்பிலை போட்டு மிதமான தீயில் ஒரு நிமிடம் வறுக்கவும்.
அதன் பின்னர் நறுக்கிய பூண்டு மற்றும் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி 5 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க விடவும்.
இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து பருகினால் வயிற்றில் தேங்கிய கெட்ட வாயுக்கள் முழுவதும் வெளியேறி விடும்.
வாயுத் தொல்லை இருப்பவர்கள் அடிக்கடி இந்த பானத்தை செய்து குடித்தால் அதற்கு முழு தீர்வு கிடைக்கும்.