Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மூலிகைகள்! 

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் மூலிகைகள்! 

ரத்தத்தில் சர்க்கரையின் அளவானது  இயல்பை விட அதிகமாக இருப்பது தான் நாம் நீரிழிவு நோய் அல்லது சர்க்கரை வியாதி என்கிறோம். பல வருடங்களாக நமது மோசமான உணவு பழக்கத்தினாலும், தவறான பழக்கவழக்கங்களினாலும் நமது.  உடலின்  மெட்டபாலிசம் பாதிக்கப்பட்டு சர்க்கரை நோய் உருவாகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவாலான விஷயம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சரியான அளவில் வைத்துக் கொள்வது தான். நம் சாப்பிடும் உணவு மற்றும் மாத்திரைகளை தாண்டி நம்ம சுற்றியுள்ள மூலிகைகளுக்கும் சர்க்கரையின் அளவை குறைப்பதில் பெரும் பங்கு உண்டு.

சர்க்கரை அளவை குறைக்க கூடிய மூலிகைகளை பார்ப்போம்.

1. சிறு குறிஞ்சான் மூலிகை:  

சித்த மருத்துவத்தில் சர்க்கரை நோய்க்கான மருந்துகளில் பயன்படுவது இது. இந்த இலைகளை சாப்பிட்டுவிட்டு ஏதேனும் இனிப்பு சாப்பிட்டாலே அது சுவையை உணர இயலாது. அந்த அளவு வீரியம் மிக்கது.

சிறு குறிஞ்சான் இலைகளை நிழலில் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனை உணவு சாப்பிடுவதற்கு முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன்னால் சுடுநீரில் ஒரு ஸ்பூன் கலந்து குடித்து வர ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் நிற்கும்.

2. ஆவாரம் பூ: 

ஆவாரம் பூவில் ஆன்ட்டி டயாபட்டிக் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகளுக்கு வரக்கூடிய சிறுநீரக பாதிப்பு வராமல் தடுக்கக்கூடிய ஆற்றல் இதற்கு உண்டு.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் காய்ந்த ஆவாரம் பூவை டீயாக செய்து அருந்தி வர சர்க்கரை அளவு கட்டுப்படும்.

3. வெந்தயம்: 

எளிதாக கிடைக்கக்கூடிய பொருள் வெந்தயம். இதில் உள்ள கசப்பு சுவை மற்றும் நார்ச்சத்து சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது. இது நாம் சாப்பிட்ட உணவில் இருந்து சர்க்கரை ஆனது உடலில் வேகமாக ஏறுவதை தவிர்க்கும்.

வெந்தயத்தை வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு இரவு தூங்கும் முன்பு ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் வெந்தய பொடியை கலந்து அருந்தி வர ரத்த சர்க்கரையை குறைக்கலாம்.

4. நாவல்பழ கொட்டைகள்: 

இதில் ஆண்டி டயாபட்டிக் நிறைந்துள்ளது. இது பீட்டா செல்கள் சேதம் அடைவதை தடுப்பதோடு இன்சுலின் உற்பத்தியையும் அதிகரிக்கும்.

சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நாவல் பழ விதைகளை பயன்படுத்தி டீயாக தயாரித்து காலை, மாலை என இரு வேளைகளிலும் அருந்தி வர சர்க்கரையின் அளவை குறைக்கலாம்.

5. வேப்பிலை: 

அதிக கசப்பு சுவை கொண்ட மருத்துவ குணங்கள் நிறைந்த இலை. இது ரத்தத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

நீரிழிவு நோய் இருப்பவர்கள் காலை வெறும் வயிற்றில் 10 வேம்பு கொழுந்து இலைகளை சாப்பிட்டு வர ரத்த சர்க்கரையின் அளவு குறையும். இல்லையெனில் இந்த இலைகளை போட்டு கொதிக்க வைத்த தண்ணீரை கூட அருந்தி வரலாம்.

Exit mobile version