உங்கள் பற்களை வலிமையாக இருக்க இங்கு தரப்பட்டுள்ள டிப்ஸில் ஒன்றை தினமும் செய்து வாருங்கள்.
டிப்ஸ் 01:
வாழைப்பழத் தோலை வெயிலில் நன்கு உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதில் சிறிது உப்பு சேர்த்து மிகஸ் செய்து கொள்ளுங்கள்.
பின்னர் கிண்ணம் ஒன்றில் வாழைப்பழத் தோல் பொடி ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளுங்கள்.அடுத்து தூள் உப்பு சிறிதளவு சேர்த்து நன்கு மிக்ஸ் செய்ய வேண்டும்.அதன் பிறகு சிறிது தேங்காய் எண்ணெயை அதில் ஊற்றி நன்கு குழைத்து பற்களை தேய்த்து வந்தால் அழுக்குகள் இன்றி பளிச்சென்று இருக்கும்.
டிப்ஸ் 02:
புதினா இலை,வேப்பிலை மற்றும் துளசி இலையை நன்கு உலர்த்தி பொடித்து வைத்துக் கொள்ளுங்கள்.இந்த பொடியை கொண்டு பல் துலக்கி வந்தால் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.
டிப்ஸ் 03:
துத்தி இலையின் வேர் மற்றும் வேப்பமர பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து பற்களை சுத்தம் செய்து வந்தால் பல் ஈறுகளின் வலிமை அதிகரிக்கும்.
டிப்ஸ் 04:
கருவேலம் பட்டையை பொடித்து நீரில் குழைத்து பற்களை தேய்த்தால் பல் வலி,பல் கூச்சம் சரியாகும்.
டிப்ஸ் 05:
மாவிலை மற்றும் கொய்யா இலையை நன்றாக காயவைத்து பொடி செய்து நீரில் கொதிக்க வைத்து பருகி வந்தால் பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.பல் தொடர்பான பிரச்சனைகள் அணைத்தும் குணமாகும்.
டிப்ஸ் 06:
எலுமிச்சை தோலை வற்றல் பதத்திற்கு காயவைத்து மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பக்குவத்திற்கு பொடித்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை கொண்டு பற்களை தேய்த்து வந்தால் அவற்றின் வலிமை அதிகரிக்கும்.
டிப்ஸ் 07:
இஞ்சி வற்றலை பொடித்து தண்ணீரில் குழைத்து பற்களை தேய்த்து வந்தால் பல் ஈறு வலிமை பெறும்.
டிப்ஸ 08:
இஞ்சியை இடித்து சாறு எடுத்து தேன் கலந்து பற்களை தேய்த்தால் பல் சொத்தை,ஈறு வீக்கம் போன்ற பிரச்சனைகள் குணமாகும்.