பயனுள்ள 15 வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ..!!

0
203
#image_title

பயனுள்ள 15 வீட்டு வைத்திய குறிப்புகள் இதோ..!!

1)இரண்டு கொய்யா இலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உடனே நிற்கும்.

2)கற்பூரவல்லி மற்றும் துளசி இலையை சிறிதளவு எடுத்து அப்படியே மென்று சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு, தொண்டை வறட்சி, இருமல் பாதிப்பு குணமாகும்.

3)கீழா நெல்லியை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை குறையும். அதுமட்டும் இன்றி பசியை தூண்டும், வயிற்றுப்புண் ஆறும்.

4)கேரட் மற்றும் தக்காளி சாறுடன் 1 தேக்கரண்டி தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் சுறுசுறுப்பாக இருப்பார்கள்.

5)சிறிதளவு துளசியை அரைத்து சாறு எடுத்து முகத்தில் பூசி வந்தால் தழும்புகள் மறையும்.

6)துளசி, மிளகு, உப்பு ஆகிய மூன்றையும் அரைத்து பல் வலி இருக்கும் இடத்தில் வைத்து தேய்த்தால் அவை உடனடியாக குணமாகும்.

7)ஒரு கைப்பிடி அளவு கறிவேப்பிலையை காலை நேரத்தில் மென்று சாப்பிட்டு வந்தால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும்.

8)ஒரு கிளாஸ் சூடு நீரில் 1/4 தேக்கரண்டி மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

9)அரச இலை சாறுடன் மஞ்சள் கலந்து காலில் இருக்கும் வெடிப்புகளில் தடவினால் வெடிப்பு புண் ஆறும்.

10)சின்ன வெங்காயத்தை நறுக்கி மோரில் கலந்து உப்பு சேர்த்து அருந்தினால் உடல் சூடு குறையும்.

11)சிறிது சீரகத்தை மென்று சாப்பிட்டு தண்ணீர் அருந்தினால் வாயுத் தொல்லை நீங்கும்.

12)சுரைக்காயை ஜூஸ் செய்து அருந்தி வந்தால் உடல் எடை குறையும்.

13)மஞ்சளை தணலில் இட்டு சாம்பலாக்கி தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் ஆறும்.

14)புதினா இலையை அரைத்து சாறு எடுத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி பாதிப்பு நீங்கும்.

15)புதினா இலை சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் ஆரஞ்சு பழச் சாறு கலந்து குடித்தால் மூக்கடைப்பு நீங்கும்.