Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மூட்டு வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் இயற்கை வைத்திய குறிப்புகள் இதோ!

#image_title

மூட்டு வலியை மின்னல் வேகத்தில் குணமாக்கும் இயற்கை வைத்திய குறிப்புகள் இதோ!

*நல்லெண்ணெயில் பூண்டு சேர்த்து காய்ச்சி மூட்டுகளில் தடவி வர விரைவில் தீர்வு கிடைக்கும்.

*முடக்கத்தான் இலையை அரைத்து நல்லெண்ணெயில் சேர்த்து காய்ச்சி மூட்டுகளில் வலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் மூட்டு தொடர்பான அனைத்து பாதிப்புகளும் நீங்கும்.

*விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் சம அளவு எடுத்து அதில் 1 எருக்க இலையை துண்டாக நறுக்கி காய்ச்சி மூட்டுகளில் தடவி வர விரைவில் தீர்வு கிடைக்கும்.

*குப்பைமேனி இலை, பிரண்டை, எருக்கன் இலை, முடக்கத்தான் இலை சம அளவு எடுத்து அரைத்து மூட்டுகளில் பற்று போட்டு வந்தால் வலி அகலும்.

*10 துண்டு பிரண்டை உலர்த்தி பொடியாக்கி சுடுநீரில் சேர்த்து காய்ச்சி குடித்து வர மூட்டு வலி குணமாகும்.

*கடுகு எண்ணெயில் மஞ்சள் தூள், முடக்கத்தான் கீரை பொடி சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்து மூட்டுகளில் பற்று போட்டு வந்தால் வலி அகலும்.

*தேங்காய் எண்ணெயில் மஞ்சள், உப்பு சேர்த்து காய்ச்சி மூட்டு பகுதியில் தடவி வந்தால் வலி குறையும்.

*பிரண்டை சட்னி அல்லது துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் மூட்டு வலி குறையும்.

*எருக்க இலையில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து சூடேற்றி வெதுவெதுப்பான சூட்டில் மூட்டுகளுக்கு பற்று போட்டு வந்தால் வலி குறையும்.

Exit mobile version