மழைக்காலங்களில் துவைத்த துணிகளில் வீசும் கெட்ட வாடை நீங்க எளிய வழிகள் இதோ!!

0
64
#image_title

மழைக்காலங்களில் துவைத்த துணிகளில் வீசும் கெட்ட வாடை நீங்க எளிய வழிகள் இதோ!!

மழைக்காலம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது துணிகளில் வீசும் கெட்ட வாடை தான். இந்த நாட்களில் துணிகளை துவைப்பதும் கடினம், அதை சுத்தமாக வாடை இல்லாமல் போடுவதும் கடினம். இது போன்ற தருணத்தில் உங்கள் துணிகளில் கெட்ட வாடை வராமல் இருக்க சில எளிய வழிகள் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதை முறையாக பின்பற்றினால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

தீர்வு 01:

வாஷிங் சோப்பை பயன்படுத்தி துணிகளை துவைத்த பின்னர் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து அலசினால் கெட்ட வாடை வராது.

தீர்வு 02:

மழைக்காலங்களில் துணிகளை ஊறவைக்க பயன்படுத்தும் வாஷிங் பவுடருடன் 1 தேக்கரண்டி வினிகர் மற்றும் 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா சேர்த்து ஊற வைத்து துவைத்தால் துணிகளில் கெட்ட வாடை வராது.

தீர்வு 03:

மழைகாலங்களில் துவைத்து மடித்து வைத்த துணிகளின் மேல் ஈரமான துணிகளை போடவோ மடித்த துணிகளின் மீது உட்காரவோ கூடாது. இவ்வாறு செய்வதன் மூலம் துணிகளில் கெட்ட வாடை வரும்.

தீர்வு 04:

நீங்கள் வாஷிங் மெஷினில் துவைப்பவராக இருந்தால் சற்று கவனத்துடன் துவைக்க வேண்டும். சில சமயங்களில் வாஷிங் மெஷினில் துவைக்கும் பொழுது கறைகள் துணிகளை விட்டு நீங்காது. இதனால் துணிகளில் கெட்ட வாடை வரக் கூடும்.

தீர்வு 05:

மழைக்காலங்களில் துணிகளில் கெட்ட வாடை வராமல் இருக்க வாசனை நிறைந்த திரவங்களை தண்ணீரில் தேவைக்கேற்ப கலந்து அலசலாம்.

தீர்வு 06:

மழைக்காலங்களில் துணிகளை துவைத்தால் அவை எளிதில் காயாது. இதை காய வைக்க ஃபேன் பயன்படுத்தலாம். துணி ஈரமாக இருக்கும் பொழுது அணியக் கூடாது. இவ்வாறு செய்வதால் கெட்ட வாடை இன்னும் அதிகமாகும்.