Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாள்பட்ட தேமல் மறைய சில எளிய வழிகள் இதோ!! உடனடி தீர்வு தரும் பாட்டி வைத்தியம் இது தான்!!

#image_title

நாள்பட்ட தேமல் மறைய சில எளிய வழிகள் இதோ!! உடனடி தீர்வு தரும் பாட்டி வைத்தியம் இது தான்!!

*அதிக மருத்துவ குணம் நிறைந்த கீழா நெல்லி இலை மற்றும் அதனுடன் கொத்தமல்லி இலையை சம அளவில் எடுத்து மிக்ஸி ஜாரில் போடவும்.பின்னர் தேவையான அளவு பால் சேர்த்து மைய்ய அரைத்து விழுதாக்கி கொள்ளவும்.இதை உடலில் தேமல்,கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் பூசி வருவதன் மூலம் அந்த பாதிப்பில் இருந்து விரைவில் விடுபட்டு விடலாம்.

*கட்டி மஞ்சள் ஒன்றை எடுத்து தூள் செய்து கொள்ளவும்.பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து நல்லெண்ணெய் தேவையான அளவு ஊற்றி அதில் தூள் செய்து வைத்துள்ள மஞ்சளை சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் அடுப்பை அணைத்து இவை வெது வெதுப்பான சூட்டில் இருக்கும் பொழுது தேமல் மேல் தேய்த்து வந்தால் அவை விரைவில் சரியாகி விடும்.

*அதேபோல் அதிக மருத்துவ குணம் கொண்ட துளசி இலை மற்றும் வெற்றிலையை சம அளவு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து கொள்ளவும்.இதை தேமல் மேல் பூசினாலும் தேமல் பாதிப்பு குறையும்.சுக்கு சிறு துண்டு மற்றும் துளசி இலைகள் 10 எடுத்து உரலில் போட்டு மைய்ய அரைத்து கொள்ளவும்.இதை உடலில் தேமல் பாதிப்பு இருக்கும் இடத்தில் போட்டு வர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.அதேபோல் நாம் சமையலில் அதிகளவில் பயன்படுத்தும் பூண்டில் 10 பற்கள் எடுத்து கொள்ளவும்.அதோடு வெற்றிலை ஒன்று சேர்த்து மைய்ய அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் பூசி 30 நிமிடம் கழித்து குளித்து வந்தோம் என்றால் தேமல் பாதிப்பு சரியாகும்.

*அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறு துளி நல்லெண்ணெய் ஊற்றி அதில் கருஞ்சீரகம் சேர்த்து கருக வறுக்கவும்.இதை பொடி செய்து தேமல் இருக்கும் இடத்தில் பூசி வர அந்த பாதிப்பு சீக்கிரம் சரியாகி விடும்.

*அதிக மருத்துவ குணம் கொண்ட குப்பை மேனி இலை சிறிதளவு எடுத்து அதில் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து தேமல் இருக்கும் இடத்தில் பூசி குளித்து வர தேமல் விரைவில் சரியாகி விடும்.

*சுத்தமான தேங்காய் எண்ணெயில் ஆடாதோடை இலையை போட்டு 7 நாட்கள் வரை வெயிலில் வைக்கவும்.பின்னர் தேமல் இருக்கும் இடத்தில் இந்த எண்ணெயை வைத்து தடவி வருவதன் மூலம் நாள்பட்ட தேமல் குணமாகி விடும்.

Exit mobile version