வீட்டில் சுற்றி திரியும் எலிகளை தலைதெறிக்க ஓட விட சூப்பர் ட்ரிக்ஸ் இதோ!!
உங்கள் வீட்டில் உணவு பொருட்களை உண்டு தொல்லை கொடுக்கும் எலிகளை விரட்ட அதிக செலவு இல்லாத எளிய வழிகள் கொடுக்கப்பட்டுளள்து. பயன்படுத்தி பலன் பெறவும்.
1)கிராம்பு எண்ணெய்
2)தண்ணீர்
ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் 2 தேக்கரண்டி கிராம்பு எண்ணெய் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து வீட்டில் எலி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அந்த வாசனைக்கு எலிகள் வராது.
1)புதினா எண்ணெய்
2)பூண்டு
ஒரு பூண்டை நசுக்கி ஒரு 1/4 கிளாஸ் தண்ணீரில் சேர்க்கவும். அதனுடன் 3 துளி புதினா எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். இதை எலி வரும் பாதையில் தெளித்தால் அவற்றின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.
1)நாப்தலின் உருண்டை
2)தண்ணீர்
தேவையான அளவு நாப்தலின் உருண்டை எடுத்து இடித்து பவுடராக்கி கொள்ளவும். இதை 1/2 கிளாஸ் நீரில் போட்டு எலிகள் பதுங்கி உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்தால் அதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும்.