Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிராஜுவிட்டி தொகையை திரும்பப் பெறுவதற்கான விதிகள் என்ன ? கவனமாக விதிகளை படியுங்கள் !

கிராஜுவிட்டி என்பது நீங்கள் ஒரு நிறுவனத்தில் பல வருடங்கள் சேவை புரிந்ததற்காக உங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியிலிருந்து நிறுவனம் உங்களுக்கு வழங்கக்கூடிய வெகுமதியாகும். இதனை ஓய்வூதிய பலன்களின் ஒரு பகுதி என்று கூறலாம் மற்றும் வேலையை விட்டு வெளியேறும் ஊழியர்களுக்கு நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு பயனுள்ள திட்டமாகும். அதேசமயம் இந்த கிராஜுவிட்டி தொகையை பெற வேண்டுமானால் நீங்கள் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து 4 ஆண்டுகள், 10 மாதங்கள் மற்றும் 11 நாட்கள் வேலை செய்திருக்க வேண்டியது அவசியம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.Gratuity - Taxation, Limits, Formula & Calculation - IndiaFilings

கிராஜுவிட்டி சட்டம், 1972-ன் கீழ், ஒரு நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த எந்தவொரு நபரும் கிராஜுவிட்டி தொகையை திரும்பப் பெற தகுதியுடையவர் மற்றும் 5 வருட சேவை காலத்திற்கு முன்பு ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி கிடைக்காது. உதாரணமாக, நீங்கள் ஒரு நிறுவனத்தில் 21 ஆண்டுகள் 11 மாதங்கள் வேலை செய்தீர்கள் எனில், உங்களின் கடைசி அடிப்படை சம்பளம் ரூ.22,000. இதில் உங்களுக்கு ரூ.24,000 டிஏ கிடைக்கும், மொத்தமாக உங்களுக்கு ரூ.46,000 கிடைக்கும். இந்தத் தொகையை 15 ஆல் பெருக்கினால் ரூ.6,90,000 கிடைக்கும், பிறகு இந்தத் தொகையை உங்கள் சேவை ஆண்டுகளான 22 ஆல் பெருக்க உங்களுக்கு ரூ.1,51,80,000 கிடைக்கும். அதன் பிறகு இந்தத் தொகையை 26ஆல் வகுத்தால் ரூ.583846 கிடைக்கும். இப்போது உங்களுக்கு கிடைக்கும் கிராஜுவிட்டு தொகை ரூ.583846 ஆகும்.Why Provisioning and Funding is Compulsory for Gratuity Benefits for  Companies with employee strength 10 or more ?

கிராஜுவிட்டி சட்டம், 1972-ன் படி ஒரு நிறுவனத்தில் 10 பேருக்கு மேல் பணிபுரிந்தால் அவர்களுக்கு கிராஜுவிட்டிக்கான பலன் கிடைக்கும் மற்றும் எந்தவொரு நிறுவனமும் தனது பணியாளருக்கு கிராஜுவிட்டு திரும்பப் பெறும் விதியாக அதிகபட்சமாக ரூ.20 லட்சத்தை வழங்க முடியும். மேலும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் அனைவருக்கும் திரும்ப பெறப்படும் கிராஜுவிட்டு தொகைக்கு வரி கிடையாது என்பது கூடுதல் சிறப்பு.

Exit mobile version