கோடையில் பால் விரைவில் கெட்டு போகாமல் இருக்க உங்களுக்கான பெஸ்ட் டிப்ஸ் இதோ!

0
232
Here are your best tips to keep milk from going bad this summer!

கோடையில் பால் விரைவில் கெட்டு போகாமல் இருக்க உங்களுக்கான பெஸ்ட் டிப்ஸ் இதோ!

வெயில் காலத்தில் உணவுகள் விரைவில் கெட்டு போவது இயல்பான ஒன்று தான்.வடித்த சாதம் நீர் விடுவது,பால் திரண்டு போவது,குழம்பு கெட்டுப்போவது போன்ற நிகழ்வுகளை சந்தித்திருப்பீர்கள்.

இதில் கோடை காலத்தில் பால் கெட்டுப்போகாமல் இருக்க என்ன வழிகளை பின்பற்றலாம் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.பொதுவாக பாலை நன்றாக கொதிக்க வைக்காவிட்டால் கெட்டு போய்விடும்.பாலில் எலுமிச்சை சாறு போன்ற திரிய வைக்க கூடிய பொருட்கள் பட்டால் வீணாகி விடும்.

ஆனால் சரியான முறையில் பாலை காய்ச்சியும் கெட்டு போகிறது என்றால் அதை கவனிக்க வேண்டும்.

பால் கெட்டுப்போகாமல் இருக்க பெஸ்ட் டிப்ஸ்:

1)பால் பாக்கெட்டை கடையில் இருந்து வாங்கி வந்த உடல் பாத்திரத்தில் ஊற்றி காய்ச்சுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் நீரில் போட்டு வைக்கவும்.இவ்வாறு செய்வதினால் காய்ச்சிய பால் கெட்டு போகாமல் இருக்கும்.

2)பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி சூடாக்கிய பின்னர் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.பிறகு நன்கு ஆறவிட்டு ஒரு தேக்கரண்டி நெல் மணிகளை போட்டால் இரவு வரை கெடாமல் இருக்கும்.

3)பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்து விட்டு பால் காய்ச்ச பயன்படுத்தவும்.ஒருவேளை பாத்திரங்களில் அழுக்கு இருந்தால் அவை பாலை கெட்டுப்போகச் செய்து விடும்.

4)பால் பாக்கெட் வாங்கி வந்து நீண்ட நேரம் ஆகிவிட்டால் பாலை பாத்திரத்தில் ஊற்றும் பொழுது சிட்டிகை அளவு சோடா உப்பு சேர்த்து கலந்து காய்ச்சினால் அவை கெட்டுப்போகாமல் இருக்கும்.