Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உடனடியாக குடல் புழுக்களை வெளியேற்ற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ!!

உடனடியாக குடல் புழுக்களை வெளியேற்ற எளிமையான வீட்டு வைத்தியம் இதோ!!

மனிதர்கள் பலவிதமான உணவுகளை சாப்பிடுவதாலும் குறிப்பாக அசைவ உணவுகளை சரியாக சமைக்கப்படாமலும் மேலும் அதிகம் சாப்பிடுவதால் வயிற்று புழுக்கள் உடலில் அதிகமாகிறது. இவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என்று இருவருக்குமே பொதுவாக வயிற்றில் புழுக்கள் ஏற்படுகிறது.

குழந்தைகளுக்கு வயிற்றில் புழுக்கள் இருக்கும் அறிகுறிகள் என்னவென்றால் அவர்கள் இரவில் தூங்கும் போது பற்களை நரநெறவென்று கடிப்பார்கள். மேலும் தூங்கும் நேரத்தில் ஜொள்ளு விடுவது போல் எச்சில் வெளியாகும்.

இது போலவே பெரியவர்களுக்கு வயிற்றுப் பகுதியில் வலி, இளம் வயதினருக்கு மற்றும் முதுகு பகுதியில் தேம்பல் போல வெண்படையாக இருக்கும்,செரிமானமாக தன்மை, உணவை பார்த்தாலே சாப்பிட முடியாமல் இருக்கும் உணர்வு, மயக்கத்தன்மை, ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் போல் உடல் மெலிந்து காணப்படுவார்கள, மலச்சிக்கல் பிரச்சனை, சிலருக்கு அடிக்கடி மலம் கழிக்க கூடிய அறிகுறிகள் இருக்கும்.

இதை முன்னதாகவே பார்த்து சரி செய்யாவிட்டால் ரத்த சோகை அதிகரித்தல் மற்றும் புழுக்கள் அதிகமாக வளர்ந்து உணவு குழாய் வழியாக மேல்நோக்கி சென்று மூக்கு மற்றும் வாய் வழியாக வருதல் ஆகியவை நடக்கும். இவை எல்லாம் கடைசி கட்ட அறிகுறிகள் என்று கூறப்படுகிறது. எனவே வீட்டிலேயே வயிற்று புழுக்களை அகற்றும் மருந்தை தயாரிக்க முடியும்.

செய்முறை:
முறை 1:
இதற்கு பூசணி விதைகள் சிறப்பான ஒரு மருந்தாகும். அதில் இருக்கக்கூடிய ஒரு முக்கியமான வேதிப்பொருளானது பூச்சிகளை கொள்ளும் தன்மையை கொண்டது. இந்த விதைகளை கொஞ்சம் வறுத்து அதை நன்றாக பொடியாக்கி 50 மில்லி அளவு டம்ளரில் 25 மில்லி தண்ணீர் மற்றும் 25 மில்லி தேங்காய் பால் என்று அளவில் இந்த பூசணி விதை பொடியை ஒரு ஸ்பூன் சேர்க்க வேண்டும்.

தொடர்ந்து ஏழு நாட்கள் இதை செய்ய வேண்டும். எட்டு வயது முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு சாப்பிடுவதால் நம் உடம்பில் இருக்கக்கூடிய புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறும்.

முறை 2:
வேப்பிலையை எடுத்து அதை நன்றாக அரைத்து ஒன்று முதல் மூன்று வயது குழந்தைகளுக்கு ஒரு மிளகு அளவில் உருண்டையும் நான்கு முதல் 12 வயதினர் ஒரு சுண்டைக்காய் அளவிலும் மற்றும் 13 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு முழு நாகப்பழம் அளவில் எடுத்துக் கொள்ளலாம்.

இதை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும் பிறகு சிறிதளவு வெந்நீர் குடிக்க வேண்டும். 7 நாட்கள் இதை தொடர்ந்து சாப்பிட வேண்டும். இவ்வாறு இதை சாப்பிடுவதால் உடலில் இருக்கக்கூடிய புழுக்கள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறி உடல் ஆரோக்கியமாக காணப்படும்.

Exit mobile version