Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

+2  முடித்த மாணவர்களே இதோ உங்களுக்கான நற்செய்தி!!  மாதம் ரூ.1000!!

here-is-good-news-for-you-2-completed-students-1000-per-month

here-is-good-news-for-you-2-completed-students-1000-per-month

+2  முடித்த மாணவர்களே இதோ உங்களுக்கான நற்செய்தி!!  மாதம் ரூ.1000!!

உயர் கல்வி படிப்பில்  சேரும் புதிய  மூன்று  லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில்  “தமிழ்ப் புதல்வன்” என்ற பெயரில் புதிய  திட்டம் வரும் 2024  கல்வி  நிதியாண்டில் அறிமுகம் செய்யப்படும் என  தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருக்கிறார்.

இதுபோன்ற புதிய திட்டங்கள் அறிவிப்பால் மாணவர்களின் உயர் கல்வியில் சேர்க்கை விகிதம் அதிகரித்து  தமிழகம் சிறந்து விளங்கும் என்று தலைமை செயலாளர் அறிவித்திருக்கிறார்.

ஏற்கனவே புதுமைப்பெண் திட்டம் மூலமாக அரசு பள்ளிகளில் படித்த  மாணவியர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுவதைப்போல, அரசுப் பள்ளிகளில் படித்த ஏழை மாணவர்களை ஊக்குவிக்கும் வகையிலும்,  மேலும் அவர்களை உயர்கல்வி வகுப்பில் சேர்க்கையை  ஊக்குவித்து உயர்த்தவும்  புதியதாக “தமிழ்ப் புதல்வன்” என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது.

இத்திட்டதின் மூலம் பயன்பெறுவதற்க்கு மாணவர்கள் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து முடித்திருக்க வேண்டும்.

இதன் மூலம் உயர்கல்வியில் சேரும் மூன்று லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 அவர்களுடைய வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என்றும், இதன் மூலம் மாணவர்கள் பாட புத்தகங்கள், பொது அறிவிற்கு தேவையான நூல்கள், வாங்கி கொள்ளலாம் எனவும்,

இதற்காக அரசுக்கு கூடுதலாக ரூ.360 கோடி உயர்கல்விக்கு ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

Exit mobile version