Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இதோ என்னுடைய பிரின்சஸ்! போட்டோவை வெளியிட்ட பிரபலம்!!

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் தன்னுடைய குழந்தையின் போட்டோவை முதல் முதலாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜி.வி. பிரகாஷ் அதன்பின் மதராசப்பட்டினம், மயக்கம் என்னஎன தொடர்ச்சியாக பல  வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அதன்பின் பென்சில் எந்த படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். அதன்பின் டார்லிங், திரிஷா இல்லைனா நயன்தாரா என வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

ஜூன் 27, 2013 ஜி.வி.பிரகாஷ் மற்றும்  சைந்தவி இருவரும் சென்னையில் திருமணம் செய்து கொண்டனர் அதன்பின் இவர்களுக்கு இந்த வருடம் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரு அழகிய பெண்  குழந்தையை பெற்றெடுத்தனர்.

அந்த குழந்தையின் புகைப்படத்தை முதன்முதலாக ஜி.வி. பிரகாஷ் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த  புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஷேர் செய்யப்படுகிறது.

 

Exit mobile version