இதோ ஸ்டாலினின் அடுத்த அசத்தல் திட்டம்! இனி அனைத்து கோவில்களிலும் இது அமல்!
திமுக ஆட்சிக்கு வந்தது எடுத்து பல நலத்திட்டங்களை செய்து வருகிறது. வழக்கமாக செயல்பட்டு வரும் பழக்க வழக்கத்தையும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றியது. அந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற திட்டத்தை கொண்டு கொண்டுவந்தனர். அத்துடன் தமிழகத்தில் முதன்முதலாக பெண் அர்ச்சகர் நியமிக்கப்பட்டார். அதுமட்டுமின்றி கோவில்களில் தமிழில் அர்ச்சனை செய்யப் படுவது அமல்படுத்தப்பட்டது.
இவ்வாறான பல புதிய பழக்க வழக்கங்களை திமுக ஆட்சிக்கு வந்ததும் புதுப்பித்தது. இதனை பலரும் பாராட்டி வந்தனர். இருப்பினும் ஒரு சிலர் பாரம்பரியத்தை மாற்றுவதா எனக்கூறி அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அத்தோடு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் கோயில்களில் பராமரிப்பை மேம்படுத்த முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இது 17 பேர் கொண்ட குழுவாக செயல்படும் என்று கூறியுள்ளனர். இந்த குழுவின் வேலையானது கோவிலுக்கு வரும் பக்தர்கள் தேவையை நிறைவேற்றும் மற்றும் அவர்களின் பராமரிப்பை மேம்படுத்துவதும் இதன் தலையாய பணி என்று கூறியுள்ளார்.
மு க ஸ்டாலின் இக்குழுவின் தலைவர். இக்குழுவின் துணை முதல்வராக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளார். மேலும் அறநிலையத் துறை செயலாளர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் இக்குழுவின் அலுவல் சார் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுடன் ஓய்வுபெற்ற நீதிபதி டி மதிவாணன், முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாச்சல அடிகளார் ஆகியோரும் இணைந்துள்ளனர்.இனி வரும் காலங்களில் மக்களின் தேவைகளை நிறைவேற்ற இந்த 17 பேர் கொண்ட குழு அமலில் இருக்கும்.ஒவ்வொரு கோவிகல்களிலும் பக்தர்களின் தேவையை கேட்டறிந்து செயல்படுத்தும் இந்த திட்டம் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.