இதோ சுவையான பழம்!! இதனால் ஏற்படும் நன்மைகளை பாருங்கள்!!

0
162
#image_title

இதோ சுவையான பழம்!! இதனால் ஏற்படும் நன்மைகளை பாருங்கள்!!

சீதா பழம் மருத்துவ குணம் நிறைந்த ஒரு பழமாகும். சீதாப் பழம் பார்ப்பதற்கு வெளித்தோற்றத்தில் வித்தியாசமாக இருந்தாலும் அதன் உள்ளிருக்கும் சதைப்பகுதி மிகவும் இனிப்பாகவும்,சுவையாகவும் இருக்கும்.

சீதாப்பழம் நன்மைகள்:

சீதாப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் ஜீரண கோளறு வராமல் தடுக்கிறது. மலச்சிக்கல் உள்ளவர்கள் சீதாப்பழத்தைச் சாப்பிட்டால் மலச்சிக்கல் குணமாகிவிடும்.

சரும வறட்சி உள்ளவர்கள் சீதா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சரும வறட்சி நீங்கி பளபளப்பாகி விடும். சீதா பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

சீதாப்பழம் உடலுக்கு நன்கு வலிமையை தரக்கூடியது. இதில் கால்சியம் நிறைந்திருக்கும் காரணத்தினால் எலும்புகள் மற்றும் பற்கள் பலமடையும்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் சீதாப்பழத்தை சாப்பிடலாம். ஆனால் இனிப்பு சுவை அதிகமாக இருக்கும் காரணத்தால் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும்.

சீதாப்பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது என்பதால் இரத்தசோகை உள்ளவர்கள் இந்த பணத்தை சாப்பிடுங்கள் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். சீதா பழத்தை சாப்பிடும் பொழுது சோர்வை அகற்றி சுறுசுறுப்புடன் செயல்பட வைக்கிறது.

எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் சீதாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வருகையில் பசி எடுக்கும் தன்மை அதிகரித்து உடல் எடை கூட உதவுகிறது.