BANK JOB: பேங்க்கில் வேலை தேடுபவர்களுக்கு கிடைத்த ஒரு அறிய வாய்ப்பு SBI வெளியிட்ட வேலைவாய்ப்பு.
இந்தியாவில் மிகப் பெரிய வங்கியான எஸ் பி ஐ யில் வர்த்தக நிதி அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. நாடு முழுவதும் 150 காலியிடங்களை திட்டமிட்டுள்ளது எஸ் பி ஐ. இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள். தகுதி டிகிரி முடித்திருத்தல் வேண்டும் விண்ணப்பிக்க கடைசி தேதி 23.1.2025.
வயது தகுதி மற்றும் கல்வி தகுதி: 31.12 2024 அன்றின் படி, 23 முதல் 32 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகள் வயது சலுகை உண்டு. எஸ்.சி மற்றும் எஸ்.டி ஐந்து ஆண்டுகள் சலுகை உண்டு. அதிகபட்சமாக மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு பத்தாண்டு அரை வயதில் சலுகை உண்டு. Forex by IIBF(Indian Institute of Banking and Finance) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் கம்யூனிகேஷன் ஸ்கில், பிரசன்டேஷன் மற்றும் பிராசசிங் ஸ்கில் ஆகியவை நேர்முக தேர்வின் போது, குறிப்பாக கவனிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கட்டணம்: இதற்கு விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் மட்டுமே அணுக முடியும். https://www.sbi.co.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம். ஓ.பி.சி, இ. டபிள்யூ.எஸ் மற்றும் பொது பிரிவினருக்கு ரூபாய் எழநூற்று ஐம்பதும், பிற பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.