Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கண் சம்மந்தபட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இதோ!! இதை செய்தால் மருத்துவச் செலவு ஏற்படாது!!

here-is-the-solution-to-all-eye-related-problems-doing-this-will-not-incur-medical-expenses

#imaghere-is-the-solution-to-all-eye-related-problems-doing-this-will-not-incurhere-is-the-solution-to-all-eye-related-problems-doing-this-will-not-incur-medical-expenses-medical-expensese_title

கண் சம்மந்தபட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு இதோ!! இதை செய்தால் மருத்துவச் செலவு ஏற்படாது!!

மனித உடலில் கண் மிகவும் முக்கிய உறுப்பு.கண் இல்லையென்றால் வாழ்க்கை பெரும் போராட்டமாகி விடும்.கண்களை ஆரோக்கியமான முறையில் பராமரிக்க வேண்டும்.ஆனால் நம்மில் பலர் கண்களின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதில்லை.இதனால் கண்களில் எரிச்சல்,சிறுவயதிலேயே கண் பார்வை குறைபாடு,கருவளைய பாதிப்பு,கண் கருவிழியில் பாதிப்பு போன்றவற்றை சந்திக்க நேரிடுகிறது.

இது போன்ற கண் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அனைத்தும் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வைத்தியத்தை பின்பற்றவும்.

கண் எரிச்சல் நீங்க:-

இரவு தூங்குவதற்கு முன்னர் 3 சொட்டு விளக்கெண்ணெயை கண்களில் விடவும்.இவ்வாறு செய்வதினால் கண் எரிச்சல் நீங்கும்.இரவு 10 மணிக்குள் தூங்கும் பழக்கத்தை கொண்டு வாருங்கள்.

கண்பார்வை தெளிவு பெற:-

பாலில் பாதாம் பருப்பு பொடி சேர்த்து அருந்தி வரவும்.சோம்பு பால் குடித்து வந்தால் கண் பார்வை தெளிவாகும்.

கண் அரிப்பு நீங்க:-

வெது வெதுப்பான நீரில் கல் உப்பு சேர்த்து கலக்கி கண்களை கழுவி வந்தால் கண் அரிப்பு குணமாகும்.

கண் கருவளையம் நீங்க:-

வைட்டமின் ஈ மாத்திரையை கண்களை சுற்றி அப்ளை செய்து அரை மணி நேரம் கழித்து சுத்தப்படுத்தவும்.இவ்வாறு செய்வதன் மூலம் கருவளைய பாதிப்பை சரி செய்ய முடியும்.

கண் சிவந்து போதல் குணமாக:-

குளிர்ந்த நீரை கொண்டு கண்களுக்கு ஒத்தடம் கொடுத்தால் கண் சிவந்து போதல் பாதிப்பு குணமாகும்.

கண் கட்டி குணமாக:-

கொத்தமல்லி விதை சிறிதளவு எடுத்து ஒரு கிளாஸ் அளவு நீரில் போட்டு காய்ச்சி ஆறவிட்டு கண்களை கழுவினால் கண் கட்டி நீங்கும்.

கண் புரை நீங்க:-

மிளகு மற்றும் பாதாம் சம அளவு எடுத்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண் புரை பாதிப்பு நீங்கும்.

கண் வறட்சி நீங்க:-

வெள்ளரி துண்டுகளை வட்ட வடிவில் நறுக்கி கண்களின் மீது சிறிது நேரம் வைத்தால் கண் வறட்சி நீங்கி கண்களில் ஈரப்பதம் உண்டாகும்.

Exit mobile version