தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 2019ஆம் ஆண்டு நடத்தி முடிக்கப்பட்டது. அப்போது இரண்டு கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தல சட்டவிரோத கங்கள் நடைபெற்றிருப்பதாக அப்போதைய எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த திமுக கடுமையாக குற்றம் சாட்டியது.
இது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது, மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. இந்த தேர்தலை நடத்த வேண்டும் என்று பலரும் நீதிமன்றக் கதவைத் தட்ட அதற்கேற்றார்போல நீதிமன்றமும் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது.
அதனடிப்படையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று தீர்மானம் செய்த தேர்தல் ஆணையம் அந்த தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கியது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்ய ஆரம்பித்த நிலையில் எதிர்வரும் 19ஆம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
வாக்கு எண்ணிக்கை இந்த மாதம் 22ஆம் தேதி நடைபெறும் என்று தகவல் கிடைத்திருக்கிறது, இந்த தேர்தல் பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டுமே நடக்கவிருக்கிறது.
இந்த தேர்தலின் மூலமாக 138 நகராட்சிகளில் 3843 வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், 490 பேரூராட்சிகளில் 7621 வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், 21 மாநகராட்சிகளில் 1374 வார்டு உறுப்பினர் பதவி இடங்களும், உள்ளதால் மொத்தமாக 12838 உள்ளாட்சி பிரதிநிதிகள் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார்கள்.
இந்த தேர்தல் முடிவு பெற்ற பிறகு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஒருவரை மாநகராட்சி மேயர் நகராட்சித் தலைவர், பேரூராட்சி தலைவர், உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட தேர்வு செய்து மறைமுக வாக்குகளை செலுத்துவார்கள்.
அந்தவிதத்தில் 21 மேயர்கள்,138 நகர் மன்ற தலைவர்கள், 490 பேர் ஊராட்சி மன்ற தலைவர்கள், 21 துணை மேயர்கள், 138 நகராட்சி மன்றத் துணைத் தலைவர்கள், 490 பேரூராட்சி மன்ற துணை தலைவர்கள் என்று ஒட்டுமொத்தமாக 1298 பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்கள்.