இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் இதோ..!!
சாமானிய மக்களுக்கு தங்கம் ஒரு சிறந்த முதலீடாக இருக்கிறது. தங்கத்தை காசாகவோ, ஆபரணமாகவோ வாங்கி சேமித்து வைக்கும் பழக்கத்தை நம் அனைவரும் கொண்டிருக்கிறோம். அவசரத் தேவைக்கு தங்கம் தான் கைகொடுக்கும் என்பதினால் அதன் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தங்கம் ஏற்ற, இறக்கத்துடன் விற்பனையாகி வருகிறது.
இதன் விலை ஏறினாலும், இறங்கினாலும் நகை கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்தபாடு இல்லை. நேற்று முன்தினம் 1 கிராம் தங்கத்தின் விலை ரூ.5,700 ஆக இருந்த நிலையில் நேற்றுடன் அதன் விலை ஏறுமுகத்துடன் உள்ளது. நேற்று 1 கிராம் தங்கம் ரூ.5820க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மேலும் இருக்குறது.
அதன்படி 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,830க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.46,640க்கும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் 24 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.11 உயர்ந்து ரூ.6,360க்கும், சவரனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.50,880க்கும் விற்பனையாகி வருகிறது.
மேலும் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.80.50 காசுக்கு 1 கிலோ வெள்ளி ரூ.80,500க்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி இருப்பதால் சாமானிய மக்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.