Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

FD கணக்குகளில் முதலீடு செய்ய திட்டமிடுகிறீர்களா ? பல்வேறு வங்கிகளின் வட்டி விகிதங்கள் இதோ !

இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை கட்டுப்படுத்த சமீபத்தில் ரெப்போ விகிதத்தை உயர்த்தியது, கடந்த மே 22-ம் தேதி முதல் தொடர்ந்து ஐந்தாவது முறையாக ரெப்போ விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வங்கிகள் பிக்ஸட் டெபாசிட் கணக்குகளின் வட்டி விகிதங்களில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மே மாதத்தில் 5.9% இருந்த ரெப்போ விகிதத்தை 0.35% உயர்த்தி 6.25% ஆக உயர்த்தியது. இந்தியாவின் வருடாந்திர சில்லறை விலை பணவீக்கம் 2022 அக்டோபரில் 6.77% இல் இருந்து நவம்பர் 2022 இல் 5.88% ஆகக் குறைந்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி:

பஞ்சாப் நேஷனல் வங்கி சேமிப்பு கணக்குகள் மற்றும் எஃப்டி கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை ஜனவரி-1 முதல் உயர்த்துவதாக அறிவித்தது. ரூ.100 கோடி அல்லது அதற்கு மேல் உள்ள சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகளும், எஃப்டி கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை 50 அடிப்படைப் புள்ளிகள் வரையும் அதிகரித்துள்ள்ளது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஜனவரி 1 அன்று 7 முதல் 90 நாட்கள் வரையிலான குறுகிய கால டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் அதிகரிப்பதாக கூறியது. வங்கி இப்போது பொது மக்களுக்கு அதிகபட்சமாக 6.55% வட்டி விகிதத்தை வழங்குகிறது, மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் மூத்த குடிமக்களுக்கு முறையே 0.50% மற்றும் 0.75% வட்டி விகிதத்தை வழங்குகிறது.

பஞ்சாப் & சிந்து வங்கி:

பஞ்சாப் & சிந்து வங்கி ஜனவரி 1 அன்று எஃப்டி கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. 601 நாட்களுக்கான டெபாசிட்டுகளுக்கு அதிகபட்சமாக 7% வட்டி விகிதத்தை வழங்குகிறது மற்றும் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டுகளுக்கு 2.80% முதல் 6.25% வரை வட்டி விகிதத்தை வழங்குகிறது.

பந்தன் வங்கி:

பந்தன் வங்கி கடந்த ஜனவரி 5ம் தேதி எஃப்டி கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியது. வங்கி மூத்த குடிமக்களுக்கு 3.75% முதல் 6.60% வரையிலும், 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையில் முதிர்ச்சியடியும் மூத்த குடிமக்கள் அல்லாதவர்களுக்கு 3.00% முதல் 5.85% வரையிலும் வட்டி விகிதங்களை வழங்குகிறது.

Exit mobile version