அரசி மற்றும் உளுந்து இல்லாமல் ஒரு தோசை ரெசிபி இதோ!! 30 நிமிடத்தில் தயார்!!
நம் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முக்கிய இடத்தை பிடித்துள்ள இந்த தோசை பல வகைகளில் செய்து உண்ணப்பட்டு வருகிறது.நம்மில் பெரும்பாலானோருக்கு தோசை பிடித்தமான உணவில் முதல் இடத்தில் இருக்கிறது.தோசை செய்வதற்கு அரசி,உளுந்து ஆகியவற்றை ஊறவைத்து ஆட்டி அதை புளிக்க என்று இத்தனை வழிகளை கடிப்பிக்க வேண்டி இருக்கு.ஆனால் அரிசியோ,உளுந்தோ இல்லாமல் 30 நிமிடத்தில் தோசை வார்க்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? வெறும் 30 நிமிடத்தில் மாவு அரைத்து தோசை வார்ப்பது குறித்த முழு விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
தேவையான பொருட்கள்:-
*ரவை – 1 கப்
*அவல் – 1 கப்
*தயிர் – 3 தேக்கரண்டி(புளிக்காத தயிர்)
*உப்பு – தேவையான அளவு
*பேக்கிங் சோடா – தேவையான அளவு
செய்முறை:-
முதலில் ஒரு பவுல் எடுத்து அதில் 1 கப் ரவை சேர்த்து தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும்.
அடுத்து இன்னொரு பவுல் எடுத்து அதில் 1 கப் அவல் போட்டு அதை 2 அல்லது 3 முறை தண்ணீர் ஊற்றி கழுவிக் கொள்ளவும்.பின்னர் அவல் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி ஊற விடவும்.
இவை இரண்டையும் 20 நிமிடங்கள் வரை ஊறப்போடவும்.அடுத்து ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் ஊறவைத்துள்ள அவலை தண்ணீர் வடித்து அதில் சேர்த்துக் கொள்ளவும்.அதோடு 3 தேக்கரண்டி அளவு தயிர் சேர்த்து முதலில் தண்ணீர் ஊற்றாமல் அரைக்கவும்.பின்னர் சிறிதளவு தண்ணீர் ஊற்றி மைய்ய அரைக்கவும்.
இதை ஒரு பவுலுக்கு மாற்றிக் கொள்ளவும்.அடுத்து அதே மிக்ஸி ஜாரில் ஊறவைத்துள்ள ரவையை சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.பின்னர் இதை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள அவல் மாவில் சேர்த்துக் கொள்ளவும்.
அடுத்தில் தேவையான அளவு உப்பு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி கொள்ளவும்.
அடுப்பில் தோசைக்கல் வைத்து அவை சூடேறியதும் தயார் செய்து வைத்துள்ள மாவை ஊற்றி தோசை வாரத்துக் கொள்ளவும்.அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வந்த பின்னர் ஒரு தட்டிற்கு மாற்றிக்கொள்ளவும்.இந்த தோசைக்கு கடலை சட்னி சிறந்த காமினேஷனாக இருக்கும்.k