குழந்தைகள் பெரும்பாலும் இரண்டு வயது முதலே பேசத் தொடங்குகின்றன. அவ்வாறு பேசும் குழந்தைகளுக்கு ‘ட’, ‘ர’ போன்ற இடை எழுத்துக்கள் சுலபமாக வருவதில்லை. மேலும் பெரும்பாலும் ‘ழ’கரம் உச்சரிப்பு மட்டும் நான்கு அல்லது ஐந்து வயது முடியும் குழந்தைகளுக்கே வருவது கடினம்.
இந்த ‘ழ’கரம் எழுத்து வரும் சொல்லை இந்த முறைப்படி நீங்கள் தினமும் கூறவைத்து பழக்கினால் வெகு சீக்கிரமாகவே உங்கள் குழந்தைகள் அதனைப் பின்பற்ற கூடும்.
தமிழில் ஒரு TONGUE TWISTER உருவாக்கும் முயற்சி!
“குளவி கொட்டிக் குழவி அழ
பதறிய கிழவி இடறி விழ
கிளவியற்றுக்கிடந்த குழவியைக் கண்டு
கிழவி குலவையிட
குலவியது பெருங்கூட்டம்”
பொருள்
குளவி- கொட்டும் தன்மை கொண்ட பூச்சி
குழவி – குழந்தை
கிழவி – மூதாட்டி
கிளவி- பேச்சு /மொழி
குலவை- நாவால் எழுப்பும் சத்தம்
குலவி- ஒன்றுகூடுதல்
இதனைப் பள்ளி செல்லத் தொடங்கும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால், அவர்கள் சுலபமாகவே கடினமான வார்த்தைகளைக் கூட இயல்பாகப் பேசும் திறனை அடைவார்கள்.