பைல்ஸ் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியல் இதோ!!

0
89
Here's a list of foods people with piles should eat and avoid!!

நீங்கள் அலட்சியம் செய்யலாம் உரிய நேரத்தில் சிகிச்சை பெற வேண்டிய நோய் பாதிப்புகளில் ஒன்று பைல்ஸ்(மூலம்).ஆசனவாய் பகுதியை சுற்றி வீக்கம் மற்றும் புண்கள் ஏற்பட்டு மிகுந்த வலி மற்றும் வேதனையை கொடுக்கும்.பைல்ஸ் பாதிப்பை அனுபவித்து வருபவர்களுக்கு மட்டுமே தெரியும்.

பிடித்த உணவுகளை சாப்பிட முடியாமல் நிம்மதியாக மலம் கழிக்க முடியாமல் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருபவர்கள் ஏராளம்.உணவு மற்றும் வாழ்க்கை முறை காலத்திற்கு ஏற்ப மாறி வருகிறது.பைல்ஸ் பாதிப்பில் இருந்து மீள நாம் நிச்சயம் உணவுமுறையில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

பைல்ஸ் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்:

காரம் நிறைந்த உணவுகளை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.அதிக காரம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் மலம் கழிக்கும் பொழுது ஆசனவாயில் இருந்து அதிக இரத்தம் வெளியேறும்.

கொழுப்பு மற்றும் கார்போஹைடிரேட் உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.பால் மற்றும் பால் பொருட்களை அதிகளவு எடுத்துக் கொண்டால் வாயு,வயிறு பிடிப்பு மற்றும் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாக நேரிடும்.

அதேபோல் எளிதில் செரிக்காத உணவுகளை தவிர்ப்பது நல்லது.இதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு மலம் கழிப்பதில் மிகுந்த சிரமம் ஏற்படும்.நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை தவிருங்கள்.

பைல்ஸ் உள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்:

பச்சை இலை காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.பீன்ஸ்,முட்டைகோஸ்,முள்ளங்கி,கீரை மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ள உணவுகளை அதிகளவு எடுத்துக் கொள்ள வேண்டும்.வாழைப்பழம்,நீர்ச்சத்து நிறைந்த பழங்களை சாப்பிட வேண்டும்.