80 வயதிலும் ஊசியில் நூல் கோர்க்கும் அளவிற்கு கண் பார்வை கூர்மையாக சிம்பிள் ஹோம் ரெமிடி இதோ!!
வீட்டிற்கு முன் அழகிற்காக வளர்க்கப்படும் மரங்களில் வாகையும் ஓன்று.இந்த மரத்தின் பூக்கள் மனதை கொள்ளையடிக்கும் அளவிற்கு அழகாக இருக்கும்.ஆனால் இவை வெறும் அழகு மரம் மட்டுமல்ல.இவை ஒரு மூலிகை மரமாகும்.
இந்த வாகை மரத்தின் வேர்,பூ,இலை,பட்டை மற்றும் விதைகளில் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,சோடியம்,புரதம் போன்ற சத்துக்கள் அதிகளவில் நிறைந்திருக்கிறது.இந்த வாகை மரத்தின் பூக்கள் கண் தொடர்பான பாதிப்புகளை சரி செய்ய உதவுகிறது.
தேவையான பொருட்கள்:-
1)வாகை பூ
2)சீரகம்
3)பனங்கற்கண்டு
4)தண்ணீர்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒன்றரை கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு ஒரு வாகை பூவை சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் சேர்க்கவும்.
அதன் பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்து வாகை நீரில் சேர்த்து கொதிக்க விடவும்.2 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இந்த பானத்தை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது பனங்கற்கண்டு சேர்த்து பருகி வந்தால் கண் பார்வை குறைபாடு,கண் எரிச்சல்,கண் வலி வீக்கம் அனைத்தும் குணமாகும்.
மற்றொரு தீர்வு:-
தேவையான பொருட்கள்:-
1)வாகை விதைப்பொடி
2)தண்ணீர்
செய்முறை:-
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்க கூடிய வாகை விதைப்பொடி 100 கிராம் அளவிற்கு வாங்கிக் கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.
பின்னர் வாங்கி வந்த வாகைப்பொடி ஒரு தேக்கரண்டி அளவு சேர்த்து 2 நிமிடங்களுக்கு மிதமான தீயில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் கண் தொடர்பான பாதிப்புகள் முழுமையாக குணமாகும்.
அதேபோல் ஒரு கிளாஸ் பாலில் ஒரு தேக்கரண்டி அளவு வாகைமர பட்டை பொடி சேர்த்து காய்ச்சி பருகி வந்தால் கண் நோய்,உடல் சூடு,பசியின்மை உள்ளிட்ட பாதிப்புகள் குணமாகும்.