Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ!

#image_title

எறும்பு முதல் எலி வரை அனைத்து தொல்லைகளுக்கும் எளிய தீர்வு இதோ!

1)கரப்பான் பூச்சி ஒழிக்க வழி:-

*2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை 1 கிளாஸ் தண்ணீர் கலந்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தெளித்தால் அதன் தொல்லை நீங்கும்.

*3 ஸ்பூன் பேக்கிங் சோடாவை கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தூவி விட்டாலும் அதன் தொல்லை ஒழியும்.

2)எறும்பு தொல்லை நீங்க:-

*தேவையான அளவு கிராம்பை பொடி செய்து எறும்பு தொல்லை இருக்கும் இடத்தில் தூவி விடலாம்.

*5 அல்லது 6 கிராம்பை எறும்பு நடமாட்டம் இருக்கும் இடத்தில் போட்டு வைக்கலாம்.

3)மூட்டை பூச்சியை ஒழிக்க வழி:-

*1 கைப்படி அளவு புதினா இலையை அரைத்து 2 கிளாஸ் தண்ணீரில் கலந்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்து விடலாம்.

4)வண்டு தொல்லை நீங்க:-

*அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளை அதிகம் வண்டு பிடிக்கும். இந்த வண்டு நடமாட்டத்தை தடுக்க 2 கொத்து வேப்பிலையை அரிசி, பருப்பு உள்ளிட்டவைகளில் போட்டு வைக்கலாம்.

5)எலி தொல்லை நீங்க:-

*1 கிளாஸ் நீரில் 3 துளி புதினா எண்ணெய் சேர்த்து கலந்து எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளித்து விடலாம்.

6)பல்லி தொல்லை நீங்க:-

*முட்டை ஓடுகளை அரைத்து பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தூவி விடலாம்.

7)கொசு தொல்லை நீங்க:-

*காய்ந்த வேப்பிலையை விளக்கில் போட்டு தீ மூடினால் அந்த புகை வாடைக்கு கொசு தொல்லை ஒழியும்.

8)ஈ தொல்லை நீங்க:-

*லாவண்டர் அல்லது யூகலிப்டஸ் எண்ணெயை தண்ணீரில் கலந்து தெளித்தால் ஈ தொல்லை நீங்கும்.

Exit mobile version